வாலிபர் மாயம்

மதுரை அருகே வாலிபர் மாயமானார். குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளையும் விரட்டி விட்டார்.
வாலிபர் மாயம்
Published on

மதுரை

மதுரை எம்.கே.புரம் தெற்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி(36). வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனைவியை குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விட்டார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை வேல்முருகன் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்தார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com