என் மலர்
திருப்பத்தூர்
- வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டின் அருகில் உள்ள பள்ளத் தில் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது 2 நல்ல பாம்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பள்ளத்தில் பதுங்கியிருந்த 5 அடி மற்றும் 3 அடி நீளமுள்ள 2 நல்ல பாம்புகளை பிடித்தனர்.
இதேபோல் சின்ன கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த அகி லன் என்பவரது வீட்டில் அருகில் பாம்பு வந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சென்று 3 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்புகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- பைக் பறிமுதல்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயத்தை முழுமையாக ஒழிக்கவும், வெளிமாநில மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்வதை தடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வாணி யம்பாடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் தகரகுப்பத்தை அடுத்த தரைக் காடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஒரு இடத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயத்தையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சாராயத்தை பதுக்கி வைத்திருந்த சங்கர் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் திருப்பத்துர் கோட்ட டத்தை சார்ந்த திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர் நாடு, வெலக்கல்நத்தம், மிட்டூர் ஆகிய துணை மின் நிலையங் களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப் பத்தூர்டவுன்,ஹவுசிங் போர்டு, குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்தி பெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்ட பள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூர், குரிசிலாப்பட்டு, மூலக்காடு, கரம்பூர், ராஜபா ளையம், பெருமாபட்டு, பள்ளவள்ளி, கூடப்பட்டு. ஜவ்வா துமலை புதுர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம்,சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக் கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண் ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம். மிட்டூர்,மரிமாணிகுப்பம், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை ஒமகுப்பம், பாரதிநகர், நாச்சியார்குப்பம், மல்லாண்டியூர். விளாங்குப்பம், இருணாப்பட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், பரவக்குட்டை, ஜல்தி, பள்ளத்தூர், ரெட்டிவ லசை, குண்டுரெட்டியூர், நஞ்சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம், லக்கன்வட்டம் ஆகிய பகுதிகளில்ஸமின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியா ளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- ஆம்பூர் மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
- இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் அவதி
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டு ஊராட்சி பச்சக்குப்பம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் நேற்றிரவு அதிக மின் அழுத்தம் காரணமாக ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் அதிக மின்னழுத்தம் வந்ததற்கான காரணத்தை கண்டறிந்து மின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மின் கோளாறை கண்டுபிடித்து சரி செய்ய முடியாததால் பச்சகுப்பம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியதால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த மாதனூர் பெரியங்குப்பத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 50). தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று மாலை துத்திப்பட்டு பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மோகன சுந்தரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனசுந்தரம் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது
- மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை சரி பார்த்தனர்
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பெரிய வரிகம் பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த நிலையில் பசு மாடு ஒன்று அந்த வழியாக சென்றது. அப்போது அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பசுமாடு பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த மாட்டை அப்புறப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மின்சார வாரியம் சார்பாக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
- வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்
- ஏலகிரி மலை காப்பு காட்டில் பாம்பை விட்டனர்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் வசித்து வரும் பாண்டியன் என்பவரின் வீட்டின் உள்ளே திடிரென பாம்பு புகுந்தது.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் பாம்பை அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.
- 6 ஆயிரம் கன்றுகள் தயாராக உள்ளன
- விதைகள் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளிடம் இருந்து இலவசமாக கொள்முதல்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நர்சரி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு பசுமை வளாகங்களாக மாறி வருகிறது.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 114 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.தற்போது 15 பள்ளிகளில் நர்சரி தோட்டங்கள் தொடங்கப்பட்டு, கடந்த சில வாரங்களில் சுமார் 6,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் போன்ற இதர பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவற்றில் பெரும்பாலானவை பழம்தரும் மரங்கள், இந்த மரக்கன்றுகளுக்கான விதைகள் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளிடம் இருந்து இலவசமாக கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும் தோட்டத்தின் ஒரு பகுதியில் நாட்டு மரங்களான வேம்பு, மந்தாரை, புன்னை, அரசமரம், கொய்யா, ரோஸ்வுட், இழுப்பை, வேம்பு, புளி, , பைப்பல், ஜாமுன் மற்றும் மா உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றது.
இந்த தோட்டங்களில் உள்ள செடிகள் மற்றும் மரங்களுக்குமாணவர்கள் தங்கள் இடைவேளையின் போதுதண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
பள்ளிகளில் மரக்கன்று களை வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்து வத்தை மாணவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
அனைத்து பள்ளிகளிலும் நர்சரி தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் வறண்டு காணப்படக்கூடிய கந்தலி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பரப்பு பரப்பை அதிகரிக்க முடியும் என தெரிவித்தனர்.
- பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
- சரி செய்ய கலெக்டரிடம் வலியுறுத்தல்
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம் கொடையாஞ்சி மற்றும் சுற் றுப்புற கிராமங்களில் இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட் டால் மீண்டும் இரவு முழுவ தும் மின்சாரம் வருவதில்லை. மறுநாள் காலை 9 மணிக்கு தான் மின்சாரம் வருகிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின் றனர். அதே நேரத்தில் ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப் பட்டால் மற்றொரு பகுதிக்கு வழங்குவதில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
எனவே மாவட்ட கலெக் டர் பாஸ்கர பாண்டியனுக்கு கிராம மக்கள் இதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனநலம் பாதித்திருந்தவர் குணமடைந்தார்
- கலெக்டர் முன்னிலையில் நடவடிக்கை
திருப்பத்தூர்:
வாலாஜா பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் திரிந்து கொண்டிருந்த ஒருவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதித்தவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
அவருக்கு அங்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை மற்றும் மருத்துவத்தினால் நினைவு திரும்பியது. அப்போது அவர் பெயர் அங்குலு (வயது 51) என்பதும், மராட்டிய மாநிலம், கடிச்சோர்லி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரி வித்து திருப்பத்தூருக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். மாவட்ட சுகாதார பணிகளின் இணை இயக்குனர் கொ.மாரிமுத்து, மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உடல் சிதறி அடையாளம் தெரியாத வகையில் கிடந்தது
ஜோலார்பேட்டை:
காட்பாடி அடுத்த லத்தேரி- காவனூர் ரெயில் நிலையங்க ளுக்கு இடையே சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் காட்பாடி ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயி லில் பயணம் செய்தவர் தவறி விழுந்து இறந்து கிடந்தார். அவரது உடல் சிதறி அடை யாளம் தெரியாத வகையில் கிடந்தது.
தகவல் அறிந்த ஜோலார் பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மாநிறம் உடைய வர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு வீடாகச் சென்று நேரடியாக களப்பணி
பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட குடியானகுப்பம் மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட ஜங்கலாபுரம் மற்றும் கேத்தாண்டப்பட்டி, ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பம் படிவத்தில் வழங்கியுள்ள தகவல்களை சரிபார்க்கும் பணியை வீடு வீடாகச் சென்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் குறிப்பிட்ட தகவல்கள் உண்மைதானா என குறித்து நேரடியாக களப்பணி நடைப்பெற்று வருகிறது.
இதனை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடிரென பார்வையிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் வனிதா, மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.






