என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A snake entered the house"

    • தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
    • அருகில் உள்ள காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள செடி கொடிகளை அகற்றும்போது அருகாமையில் இருந்த வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    இதனை கண்ட அருகில் இருந்த 100 நாள் திட்ட தொழிலாளர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி வீரியன் பாம்பை சிறிது நேரம் போராடி பிடித்தனர்.

    பிடித்த பாம்பை அருகில் உள்ள காட்டில் கொண்டு போய்விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்
    • ஏலகிரி மலை காப்பு காட்டில் பாம்பை விட்டனர்

    ஜோலார்பேட்டை

    நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் வசித்து வரும் பாண்டியன் என்பவரின் வீட்டின் உள்ளே திடிரென பாம்பு புகுந்தது.

    இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இது குறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    வனத்துறையினர் பாம்பை அருகில் உள்ள ஏலகிரி மலை காப்பு காட்டில் விட்டனர்.

    ×