என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள பாம்பு
- தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்
- அருகில் உள்ள காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்குட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள செடி கொடிகளை அகற்றும்போது அருகாமையில் இருந்த வீட்டிற்குள் சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனை கண்ட அருகில் இருந்த 100 நாள் திட்ட தொழிலாளர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி வீரியன் பாம்பை சிறிது நேரம் போராடி பிடித்தனர்.
பிடித்த பாம்பை அருகில் உள்ள காட்டில் கொண்டு போய்விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






