என் மலர்
நீங்கள் தேடியது "Damage to household appliances due to electrical shock"
- ஆம்பூர் மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
- இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் அவதி
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டு ஊராட்சி பச்சக்குப்பம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் நேற்றிரவு அதிக மின் அழுத்தம் காரணமாக ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் மின்வாரியத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் அதிக மின்னழுத்தம் வந்ததற்கான காரணத்தை கண்டறிந்து மின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மின் கோளாறை கண்டுபிடித்து சரி செய்ய முடியாததால் பச்சகுப்பம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியதால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.






