என் மலர்
நீங்கள் தேடியது "பொருட்கள் பறிமுதல்"
- வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.
பெங்களூர்:
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெலகாவி மாவட்டம், தேர்தலையொட்டி கானாபுரா தொகுதியில் உள்ள நந்தகாட் பகுதியில் இன்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ரூ.19,08,420 மதிப்புள்ள 395.7 கிராம் தங்கம் மற்றும் 28.065 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை அனைத்தும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹாலியாலில் இருந்து கக்கரைக்கு பில் இல்லாமல் நகைகளை கடத்தியது தெரியவந்தது. இந்த காரில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் இருந்தது. 53,33,724 மதிப்புள்ள கார் உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.
- மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள், சந்தை பகுதிகளில் அதிரடி சோதனை
- விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது
குழித்துறை, மே.25-
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் குருசாமி முன்னிலையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சந்தை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1 டன் பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
இதனை அடுத்து கடைகளுக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று ஒருமுறை பயன்படுத்தப்படுகின்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
- தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரி திடீர் ஆய்வு
- ரூ.15 ஆயிரம் அபராதம்
அரக்கோணம்:
அரக்கோணம் பஜார், காந்தி ரோடு, பழைய பஸ் நிலையம் மற்றும் சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட் டிக்கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட் டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், கேரி பேக் உள்ளிட்டவைகளை பதுக்கி வைத்திருந்த 2 குடோன்களில் இருந்து சுமார் 500 கிலோ பிளாஸ்டிக்பொருட்களை மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆனந்த் பறிமுதல் செய்து ரூ.15 ஆயிரம் அபரா தம் விதித்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் ரகுராமன், என் ஜினீயர் செல்வகுமார், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்
- கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வ லர்கள் புகார் அளித்து வந்தனர்.
அதன்பேரில் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் திருப் பத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கடைகளில் சுமார் 95 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெ.கோபாலகிருஷ் ணன் கூறுகையில் மாவட்டம் முழுவதும் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது.
மீண்டும் இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, வழக்கு பதியப்படும் என்றார்.
- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.
இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






