என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு
    X

    சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு

    • வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர்
    • அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பணந்தோப்பில் வசிப்பவர் தேவேந்திரன் (வயது 44) இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று பணந்தோப்பு புறம்போக்கில் சிமெண்டு சீட் கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தாசில்தார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி உத்தரவிட்டார் இதனையடுத்து நாட்டறம்பள்ளி வருவாய் அலுவலர் வனிதா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்பது உறுதியானது இதனையடுத்து வருவாய் துறையினர் சிமெண்டு கொட்டகை அமைத்திருந்ததை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×