search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He died without treatment"

    • முன்னால் சென்று கொண்டிருந்தது திடீரென பின்னோக்கி வந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவுல்ஸ்.

    இவரது மகன் கனகராஜ் (வயது 16). இவர் இன்று காலை கிருஷ்ணகிரி-வாணிய ம்பாடி நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே பங்களாமேடு சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றார்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென பின்னோக்கி வந்தது.

    இதனை கனகராஜ் கவனிக்காததால் பைக் மீது டிராக்டர் மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன், மனைவியிடையே குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28), தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (21).

    திருமணம் ஆனதிலிருந்து கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    மனமடைந்த சித்ரா வீட்டில் புடவை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

    இதனைப் பார்த்த ராஜா மற்றும் உறவினர்கள், சித்ராவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆரணி சப்- கலெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.

    • கணவரிடம் தீபாவளி பண்டிகைக்காக அம்மா வீட்டுக்கு போகனும் என்று கூறினார்
    • உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரகுபதி(35).இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. கடந்த 10 வருடமாக கொத்தமங்கலம் அருந்ததியர் தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் கணவரிடம் தீபாவளி பண்டிகைக்காக அம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    நதியாவின் கணவர் அடுத்த வாரம் தீபாவளிக்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். ,வீட்டில் இருந்த நதியா திடீரென உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து அவர் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகம் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.
    • மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    பரமத்தி வேலூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக பழைய பைபாஸ் கரூர் சாலையில் ஓரமாக நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×