என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
- குடும்ப தகராரில் விபரீதம்
- ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அண்ணான்ட ப்பட்டி ஹயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் பங்காரு (வயது 55). இவர் தன்னுடைய மகள் சூரிய கலாவை திருப்பத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (38) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் சூரியகலா தனது தந்தையுடன் வசித்து கொண்டு திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் தனியார் பள்ளி வளாகம் எதிரில் பழ கடை வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 20-ந் தேதி சூரிய கலா பழ கடையில் இருந்து போது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
பங்காரு இதனை தட்டிக்கேட்டுள்ளார், மருமகன் வெங்கடேசன் ஆத்திரமடைந்து கடையில் இருந்து கத்தியை எடுத்து மாமனாரை தாக்கிய கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் படுகாயம் அடைந்த பங்காருவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக பங்காரு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வெங்கடேசனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






