என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த காட்சி.
பழைய பிளாஸ்டிக் கழிவுகளில் திடீர் தீ
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த மருத்துவர்காலணி பகுதியில் பத்மநாபன்(வயது 35) என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு பக்கத்தில் வேலு என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.
இரும்பு கடையின் பழைய பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை அந்த காலி இடத்தில் கொட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த தீ மளமளவென பரவி பிளாஸ்டிக், ரப்பர், ரெக்சின் உள்ளிட்ட கழிவுகள் கொழுந்து விட்டு எறிந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீயால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி பட்டனர்.
இந்த சம்பவம் குறித்தும் வாணியம்பாடி டவுன் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






