search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Certificate"

    • கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்
    • அனைத்து கோணங்களிலும் ஆராய்வார்கள்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் மத்திய அரசு சுகாதார துறை சார்பில் அரசு தேசிய தரச்சான்றிதழ் வழங்கி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகிறது.

    இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த பட்டியல் மத்திய சுகாதார துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன் பின்னர் தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 அல்லது 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, வசதிகள், தினசரி நிகழும் பிரச வங்கள் எண்ணிக்கை, வெளி நோயாளிகள் எத்தனை பேர் வரு கின்றனர்.

    மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் பணியில் உள்ளனரா? உட்பட அனைத்து கோணங்களிலும் அலசி ஆராய்வார்கள்.

    பின்னர் இது தொடர்பாக அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் மதிப்பெண் அடிப் படையில் தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும். இதனால், கூடுதல் நிதி உட்பட பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கும்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜமுனாபுதூர், ராம நாயக் நடந்தது.

    தேசிய நல கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுப் பேட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தேசிய தரச் சான்றிதழ் பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டு தேசிய தரச் சான்றிதழ்களை பெற்றனர்.

    • உள்நோயாளிகளாக 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    • மருத்துவக்கல்லூரி டீன் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

    மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை பரிசோதித்து அதை உறுதி செய்யவும், சான்றளிக்கவும் 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

    அந்த வாரியமானது பல பரிசோதனைகளுக்குப் பின் தரச்சான்று வழங்கி வருகிறது. இதுவரை உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரிக்கான தரச்சான்றினை திருவண்ணா மலை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை பெற்று உள்ளது என்று மருத்துவக்கல்லூரி டீன் அரவிந்தன் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்று சுமார் 2500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதேபோல் உள்நோயாளிகளாக சுமார் 900 முதல் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 1,038 பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு உறுதுணையாக மருத்துவ அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.

    • மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது.
    • பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது.

    நெல்லை:

    மத்திய அரசின் தேசிய தரக்காப்பீட்டு சான்றிதழானது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலையையும் தீர்மானிக்கிறது. இதற்காக மாநில அளவிலான ஆய்வு குழுக்கள் ஆண்டுதோறும் ஆரம்ப சுகாதார நிலையங் களை ஆய்வு செய்யும்.

    ஊக்கத்தொகை

    இந்த சான்றிதழை பெறுவதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த ரொக்க விருதில் 25 சதவீதம் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    4-வது ஆண்டில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு குழு, தேசிய தர காப்பீட்டு சான்றிதழுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சான்றிதழை புதுப்பித்தல் மற்றும் உயர் உதவிக்காக ஆய்வு செய்யும்.

    தரக்குழு ஆய்வு

    அதன் அடிப்படையில், கடந்த மாதம் 19 மற்றும் 20-ந்தேதிகளில் தர காப்பீட்டு குழுவானது நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகர் அருகே உள்ள பர்கிட் மாநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து அதே மாதத்தில் 28 மற்றும் 30-ந்தேதிகளில் நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அந்த குழுவினர் அங்கு உள்ள வசதிகள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் அங்குள்ள ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை கூடங்கள், மருந்தகம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கூடங்களை ஆய்வு செய்தனர்.

    70 சதவீதம் மதிப்பெண்

    ஆய்வுக்கு பின்னர் நெல்லை மாவட்ட தர நிர்ணய மருத்துவ அலுவலர் பிரவின் குமார் கூறியதாவது:-

    பாளை பர்கிட்மாநகர் மற்றும் கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளது. இதனால் அவை இரண்டும் தேசிய தர காப்பீட்டு சான்றிதழை பெற தயாராக உள்ளன. எதிர்காலத்தில் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே போன்ற ஆய்வுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.

    தற்போது பர்கிட் மாநகருக்கு ரூ.7 லட்சமும், கல்லூர், திசையன்விளைக்கு தலா ரூ.10 லட்சமும் கிடைத்துள்ளது. இப்போது கிடைக்க உள்ள தரச்சான்றிதழ் மேலும் வசதிகளை சேர்க்க கூடுதலாக ரூ.3 லட்சம் கிடைப்பதை உறுதி செய்யும்.

    வைராவிகுளம், ரெட்டியார்பட்டி, பணகுடி, கீழநத்தம், வன்னிகோனேந்தல், நவ்வலடி, கல்லிடைக்குறிச்சி, ஏர்வாடி மற்றும் மன்னார் கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதேபோல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×