search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collection of money"

    • அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் இருப்பதால் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சிறப்பு கட்டண ரெயில்களை தான் தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது. இது வழக்கமாக இயக்கப்படும் ரெயில் கட்டணத்தை விட அதிகமாகும்.

    ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களை நாடுகின்றனர். ஆனால் ரெயில்வே நிர்வாகமும் தனியாரிடம் சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கிறது.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி வழியாக திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளத்திற்கு 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 3 ஜோடி சிறப்பு ரெயில்கள் பிரீமியம் கட்டணத்தில் இயக்கப்படும் என தனியார் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

    அனுமதி பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனம் டிக்கெட் விற்பனையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு முன்பே தனியார் நிறுவனத்தின் கோரிக்கை செயலாக்கத்தில் உள்ளது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி இருந்தாலும் இன்று (திங்கட்கிழமை) அனுமதி கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

    சென்னையில் இருந்து 9, 10, 11-ந்தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மறுபுறம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தனியார் நிறுவனம் அறிவித்துள்ள கட்டணம் குறித்து ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் போர்ட்டல் நேற்று டிக்கெட் முன்பதிவு விருப்பத்தை முடக்கியது.

    இது குறித்து அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்குவதாகவும் இந்த பயணங்களுக்கான முன்பதிவு விருப்பங்கள் இன்று மாலைக்குள் கிடைக்கும்" என்றும் தெரிவித்தார்.

    மண்டல ரெயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், "தீபாவளி பண்டிகை தேவையை பூர்த்தி செய்ய குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். இருப்பினும் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்க தனியார் ஆபரேட்டருக்கு வசதி அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு 3 அடுக்கு ஏசி படுக்கைக்கு ரூ.2000, 2-ம் வகுப்பு படுக்கைக்கு ரூ.3000 என தனியார் நிறுவனம் கட்டணம் வசூலிக்கிறது" என்றார்.

    சிவகாசியை சேர்ந்த காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ஜெயசங்கர் கூறும்போது, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக சென்னைக்கு செல்கின்றனர். ஆம்னி கட்டணத்தை குறைக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. சென்னையில் இருந்து செங்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசிக்கு 2 சிறப்பு ரெயில்கள் தேவை என்றார்.

    • பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இத்திட்ட பயனாளிகளின் (கே.ஓய்.சி) ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவன ஊழியர்கள் இணைய வசதி கொண்ட செல்போன், மடிக்கணினியுடன் சென்று பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் வாழப்பாடி பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக, ஒரு நபருக்கு ரூ. 30 வீதம் பணமும், ஆதார், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் வசூலித்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்திய தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பணம் மற்றும் ஆவணங்கள் வங்கியது உண்மை என தெரியவந்ததால், தனியார் நிறுவன ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், பணத்தையும், ஆவணங்களையும் பொதுமக்களிடமே திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 52). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதாப் குமார் (24) என்பவர் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செல்வகுமார் செல்போன் மூலம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு பிரதாப் குமாரிடம் கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் பணத்தை வசூலிப்பதற்காக செல்வகுமார், பிரதாப் குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பணம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதாப் குமார் செல்வகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் செல்வகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப் குமாரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×