என் மலர்
திருநெல்வேலி
- அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.
- அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே 2-வது நடைமேடையில் இருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 2 வயது குழந்தையுடன் கடும் வெயிலில் சிரமத்தோடு நடந்து வந்தார்.
அந்த பெண் தனது குழந்தையை இடுப்பில் தூக்கி வைக்க முடியாமல் மூச்சு வாங்க தரையில் நடக்க வைத்து அழைத்து சென்றார். அனல் தாங்க முடியாத குழந்தை தன்னை தூக்கும்படி தாயிடம் கெஞ்சியது.
இதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவர் கூட அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.
இதை பெண் காவலர்கள் கூட்டத்தில் இருந்த சப்-இன்ஸ் பெக்டர் சுவாதிகா கவனித்தார். அவர் உடனே கர்ப்பிணி பெண்ணின் நிலையை உணர்ந்து ஓடி சென்று அந்த குழந்தையை தூக்கிச் சென்று அவரது உறவினரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.
- நெல்லை மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
நெல்லை:
நெல்லையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகர பகுதியில் 2 பேருக்கும், ராதாபுரம், அம்பை பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்நிலையில் மாநகர பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் முடுக்கி விடப்பட்டது. இதையடுத்து மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமை யில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கமிஷனர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில் இன்று மாநகரப் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. மேலும் மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் உள்ள ஏ.டி.எம்.களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் நிலையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மாநகர பகுதியில் சந்திப்பு சரணாலயத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் தனிமையில் உள்ளார்.
- கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து யோகா ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
- ஜூன் 10-ந்தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து யோகா ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் காசி நாதத்துரை தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
விளையாட்டு துறையில் யோகா பயிற்சியாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். நடை பெற்று கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சியா ளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும், இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற ஜூன் 10-ந்தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.
- திருட்டு குறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ரம்(37). இவர்கள் 2 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.
நேற்று இரவும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர்கள் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது.
- தூத்துக்குடியில் நடைபெறும் பேரணியானது வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது.
நெல்லை:
தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று மாலை நடைபெற உள்ளது.
நெல்லை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பையில் இன்று மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது. இந்த பேரணியானது அம்பை கிருஷ்ணன்கோவிலில் தொடங்கி மெயின் பஜார் வழியாக ராணி பள்ளி அருகில் முடிவடைகிறது. இதனை யொட்டி ஏ.டி.எஸ்.பி. தலைமை யில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற பேரணியை யொட்டி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் கலைமணி தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 290 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேரணியானது சங்கர ன்கோவில் சங்கரநாராயணர் கோவில் வடக்கு ரதவீதியில் தொடங்கி நகைக்கடை பஜார், திருவேங்கடம் சாலை, கிழக்கு ரதவீதி வழியாக மீண்டும் வடக்கு ரதவீதியை வந்தடைகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரி அருகில் பேரணி தொடங்கி பிரையண்ட் நகர் கிழக்கு வழியாக வி.வி.டி சிக்னலில் முடிவடைகிறது. இந்த பேரணியையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் ஸ்ரீவை குண்டத்திலும் கள்ளபிரான் சுவாமி கோவில் முன்பு தொடங்கி வ.உ.சி. திடல் வரை அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. அங்கும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நெல்லை:
விடுதலைபோராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு புது காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரேம்குமார், தர்மராஜ், தச்சை மண்டல செயலாளர் தங்கவேலு, பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், செல்லையா, முத்துவேல், பாண்டியன், டவுன் நகர செயலாளர் குமார், மானூர் ஒன்றிய செயலாளர் தலைகான் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிறப்பு விருந்தினராக செய்யது நவாஸ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டன.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கல்லூரி களுக்கு இடையேயான கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் நிறைவு நாளான நேற்று நெல்லை மாவட்ட செய்யது குழுமங்களின் நிர்வாக இயக்குனர் செய்யது நவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
கால்பந்து போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அணி முதல் இடத்தைப் பிடித்து சுழற்கோப்பையை தட்டிச் சென்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை வீரர்கள் அணி 2-வது இடத்தை பிடித்து சுழற்கோப்பையினை கைப்பற்றியது.
இதே போல் கைப்பந்து போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், சிவகங்கை மாவட்ட சாஹிர் ஹுசைன் கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையாட்டுத் துறை முன்னாள் தலைவர் சண்முகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
முன்னதாக உடற்கல்வி யியல் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரமேஷ் தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் பேச்சி முத்து நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழக உடற்கல்வி யியல் மற்றும் விளையா ட்டுத்துறை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் விரிவுரை யாளர்கள் செய்திருந்தினர்.
- ரெட்டியார்பட்டி சாலையில் சாக்கடை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது.
- புதிதாக தார்ச்சாலை கடந்த 20 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் அதிகளவு தேங்கி பொது மக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக நீடித்த இந்த நிலை யினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் கழிவு நீரோடையும், புதிதாக தார்ச்சாலையும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பொதுவாக புதிதாக சாலை அமைக்கப்பட்டதும் சாலையில் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பப்படும். ஆனால் ரெட்டியார்பட்டி சாலையில் சாலை அமைத்து 20 நாட்களாகியும் இது நாள் வரை சாலையின் இரு புறங்களிலும் செம்மண் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக சாலை சேதம் அடையும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் சாலையில் ஓரத்தில் செல்லும் போது பள்ளத்தில் கவிழும் அபாய சூழ்நிலையும் உள்ளது.
எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மாநகராட்சி கமிஷனர் ரெட்டி யார்பட்டி சாலை யின் இரு கரைகளிலும் செம்மண் நிரப்பி கரையை பலப்படுத்த சாலையின் ஒப்பந்த தாரருக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தாய் இறந்த துக்கத்தில் யோகீஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
- ஐகிரவுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கடலூர் மாவட்டம் வடலூர் காட்டு கொள்ளை பகுதி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர்.
இவர் கடலூரில் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் யோகீஸ்வரி (வயது 23). இவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா காலகட்டத்தின் போது இவரது தாயார் இறந்து விட்டார். இதனால் தாய் இறந்த துக்கத்தில் யோகீஸ்வரி மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த விடுதி அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஐகிரவுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது.
- தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
சிங்கை:
தென்தமிழகத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தன்பொருநை என்று அழைக்கப்படும் இந்த நதியானது பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
இந்த நதியின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதன் குறுக்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு தென்தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.
143 அடி உயரத்துடன் 5500 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு 1943-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணைக்கட்டு மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் தாமிரபரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறுகள் அமைத்து அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாபநாசம் அணையில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடியாக ஆனது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையின்றி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதற்கிடையே அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாததால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை. இனி தென்மேற்கு பருவமழை ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தான் இருக்கும்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை இயல்பான மழை அளவை விட பாதி அளவிற்கும் கீழாகவே மழை பெய்துள்ளது.
மார்ச் 1 முதல் இன்று வரையில் நெல்லை மாவட்டம் சராசரியாக வெறும் 30 மில்லிமீட்டர் அளவிலான மழையையே பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அளவுக்கு குறைவு தான்.
இனி 2 மாதத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அணையின் நீர்மட்டமும் ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
நெல்லை:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 47). இவர் தெற்கு வள்ளியூரில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு விற்பனையை முடித்துவிட்டு காவலாளியிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில் மதுக்கடைக்கு வந்த மர்ம கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளியை சரமாரியாக தாக்கினர். பின்னர் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து, அங்கிருந்த சுமார் 450 மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் பணகுடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
- நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.
- 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அரசு எஸ்சி, எஸ்.டி. அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆண்டி வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் மற்றும் 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.
இதில் நெல்லை முத்திரைத்தாள் பிரிவு தாசில்தார் மோகன், மாமன்ற உறுப்பினர்கள் அஜய், ஜெகநாதன், பெருமாள் தேவி, அர்ஜுன் ராஜா, இந்து மக்கள் கட்சி தென் மண்டல செயலாளர் மகாராஜன், மாநில துணைத்தலைவர் உடையார் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட ஏராள மான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் சங்க நிர்வாகிகள் முருகன், பாப்பா, பரமசிவன், முருகானந்தம், முருகன், கடற்கரையாண்டி, தங்கராஜ், மாரியப்பன், குமரேசன், விஜய பாண்டி யன், வீர மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். எஸ்.சி. எஸ்.டி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் நன்றி கூறினார்.






