search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sundaralinganar"

    • சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    விடுதலைபோராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு புது காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரேம்குமார், தர்மராஜ், தச்சை மண்டல செயலாளர் தங்கவேலு, பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், செல்லையா, முத்துவேல், பாண்டியன், டவுன் நகர செயலாளர் குமார், மானூர் ஒன்றிய செயலாளர் தலைகான் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் நினைவு தினம்
    • ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி நினைவு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

    தூத்துக்குடி:

    விடுதலை போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் நினைவு தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி நினைவு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் வக்கீல் கனகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய வீரன் சுந்தரலிங்கனார் சிறப்பினை வருங்கால தலைமுறையினர், மாணவ, மாணவிகள் அறிந்திட ஏதுவாக கவர்னகிரி நினைவு மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை புகைப்பட காட்சிகளாக தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட முழு உருவ வெண்கல சிலைகளை விரைவில் அமைத்திடவும், மணிமண்டபத்தின் முன்புறமுள்ள பீரங்கி மேடுகள், முள்செடிகள் அகற்றி வரலாற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் திடலாக மாற்றியமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை போராட்ட வீரர்களை கவுரவித்து வரும் தமிழக அரசு எங்களின் கோரிக்கையையும் தாமதமின்றி நிறைவேற்றி தந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி செயலாளர் லெட்சுமண பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், முருகன், பெரு மாள், மாநகர இளைஞரணி மாரியப்பன், தொண்டர் அணி கருப்பசாமி, விவசாய அணி சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×