ராமையன்பட்டியில் மாவீரர் சுந்தரலிங்கனார் படத்துக்கு மரியாதை

சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சுந்தரலிங்கனார் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி..
சுந்தரலிங்கனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி..
Published on

நெல்லை:

விடுதலைபோராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா நெல்லை ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசு புது காலனியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது. இதில் தென்மண்டல அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், மாவட்ட செயலாளர்கள் பிரேம்குமார், தர்மராஜ், தச்சை மண்டல செயலாளர் தங்கவேலு, பாளை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், செல்லையா, முத்துவேல், பாண்டியன், டவுன் நகர செயலாளர் குமார், மானூர் ஒன்றிய செயலாளர் தலைகான் மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com