நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.
நலத்திட்ட உதவிகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட அரசு எஸ்சி, எஸ்.டி. அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆண்டி வரவேற்றார். நலத்திட்ட உதவிகள் மற்றும் 132 தூய்மை பணியாளர் களுக்கு சீருடைகளை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர் வழங்கினர்.

இதில் நெல்லை முத்திரைத்தாள் பிரிவு தாசில்தார் மோகன், மாமன்ற உறுப்பினர்கள் அஜய், ஜெகநாதன், பெருமாள் தேவி, அர்ஜுன் ராஜா, இந்து மக்கள் கட்சி தென் மண்டல செயலாளர் மகாராஜன், மாநில துணைத்தலைவர் உடையார் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட ஏராள மான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் சங்க நிர்வாகிகள் முருகன், பாப்பா, பரமசிவன், முருகானந்தம், முருகன், கடற்கரையாண்டி, தங்கராஜ், மாரியப்பன், குமரேசன், விஜய பாண்டி யன், வீர மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொ ண்டனர். எஸ்.சி. எஸ்.டி அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com