என் மலர்
நீங்கள் தேடியது "Nellai Schools-Colleges"
- கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து யோகா ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
- ஜூன் 10-ந்தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து யோகா ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் காசி நாதத்துரை தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
விளையாட்டு துறையில் யோகா பயிற்சியாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். நடை பெற்று கொண்டிருக்கிற சட்டமன்ற கூட்டத்தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சியா ளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும், இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற ஜூன் 10-ந்தேதி சென்னையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






