என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melapalayam- Reddiyarpatti cross road"

    • ரெட்டியார்பட்டி சாலையில் சாக்கடை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது.
    • புதிதாக தார்ச்சாலை கடந்த 20 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் அதிகளவு தேங்கி பொது மக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக நீடித்த இந்த நிலை யினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் கழிவு நீரோடையும், புதிதாக தார்ச்சாலையும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. பொதுவாக புதிதாக சாலை அமைக்கப்பட்டதும் சாலையில் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பப்படும். ஆனால் ரெட்டியார்பட்டி சாலையில் சாலை அமைத்து 20 நாட்களாகியும் இது நாள் வரை சாலையின் இரு புறங்களிலும் செம்மண் நிரப்பப்படவில்லை. இதன் காரணமாக சாலை சேதம் அடையும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் சாலையில் ஓரத்தில் செல்லும் போது பள்ளத்தில் கவிழும் அபாய சூழ்நிலையும் உள்ளது.

    எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்னர் மாநகராட்சி கமிஷனர் ரெட்டி யார்பட்டி சாலை யின் இரு கரைகளிலும் செம்மண் நிரப்பி கரையை பலப்படுத்த சாலையின் ஒப்பந்த தாரருக்கு உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×