என் மலர்
திருநெல்வேலி
- ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
- மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பி லான தார்ச்சாலை பணி களை நெல்லை மாவட்ட பஞ்சா யத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பணிகள் தொடக்கம்
அதன்படி முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்ததில் குமாரபுரம் பஞ்சாயத்து நாங்குநேரி -இடையன்குடி சாலையில் இருந்து நாலந்து லா செல்லும் சாலை, ராதாபுரம் பஞ்சாயத்து வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் செல்லும் சாலை, வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் வழியாக பாவிரித்தோட்டம் செல்லு ம் சாலை மற்றும் வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் சுப்பிர மணிய பேரி வழி யாக சவுந்திர பாண்டிய புரம் செல்லும் சாலை ஆகிய தார்ச்சா லை களுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது.
போக்குவரத்து அதிக மாக மக்கள் பெரிதும் பயன் படுத்தும் சாலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப் பட்டு பணிகள் தொடங்கப் பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சி லர்கள் ஜான்ஸ் ரூபா, லிங்க சாந்தி, ஒன்றிய கவுன்சி லர்கள் இசக்கி பாபு, ஜெஸி, படையப்பா முருகன், பரிமளம், மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர் முரளி, ராதா புரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், முருகேசன், மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர் சிவ பிராகசம், ஊராட்சிமன்ற துணை தலைவர் அனிதா பயாஸ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ராஜன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கஸ்தூரி ரெங்கபுரம் பாலன், அகஸ்டின், ராமையா, புளியடி குமார், முத்து, முருகேஷ், சதிஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
- இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் தனது அண்ணன் கோயில்ராஜிக்கு புதியதாக லோடு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவருக்கும், அதே ஊரில் ஏற்கனவே லோடு ஆட்டோ வைத்துள்ள சம்பத்ராஜாவிற்கும் (32) தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று ஜெபராஜ் தனது வீட்டு பின்புறமுள்ள தோட்டத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சம்பத்ராஜா, சேகர் மகன் டாலி, சவுந்தர்ராஜன் மகன் ஸ்டீபன் உள்பட 4 பேர் சேர்ந்து ஜெபராஜை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர் காயமடைந்தார். இதுபோல ஜெபராஜ், ஜெயசீலன், கோயில்ராஜ் ஆகியோர் சேர்ந்து சம்பத்ராஜாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் வேலம்மாள் இது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது.
திசையன்விளை:
பெண்கல்விக்காக தனது 12-வது வயதிலேயே போராடி பல இன்னல்களை சந்தித்த மலாலா பிறந்த தினமான ஜூலை 12-ந் தேதியை மலாலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் மலாலா தினம் கொண்டாடப்பட்டது. 7-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மலாலாவின் பெருமை களைப் குறுநாடகம் மற்றும் உரையாடல் மூலம் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து வகுப்பு ஆசிரியர் பேசும்போது, கல்வி என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று எனக்கூறி மலாலா பெண்கல்விக்காக போராடி யதை எடுத்துரைத்தார். முதல்வர் பாத்திமா எலிசபெத் கூறுகையில், மலாலா கல்விக்காக செய்த தியாகங்களை எடுத்துக்கூறி மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரியவாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி கற்றல் வேண்டும் என்றார்.
- நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
- ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:
ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.
முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.
கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.
- டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது அஜிதேஷ் வென்றார்.
- ஆட்ட நாயகன் விருது கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.
பர்பிள் கேப் விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை அணி கேப்டன் ஷாருக் கானுக்கு அளிக்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.
- முதலில் ஆடிய கோவை அணி 205 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நெல்லை 101 ரன்னில் ஆல் அவுட்டானது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். முகேஷுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அதீக் ரஹ்மான் 50 ரன்னில் அவுட்டானார். முகேஷ் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நெல்லை சார்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி சிக்கியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தது.
இறுதியில், நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை கிங்ஸ் சார்பில் ஜத்வேத் சுப்ரமணியம் 4 விக்கெட்டும், ஷாருக் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுரேஷ் குமார் 57 ரன்கள் சேர்த்தார்.
- பந்துவீச்சில் நெல்லை தரப்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நெல்லை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் லைக்கோ கோவை கிங்ஸ், நெல்லைராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சுஜய் 7 ரன்னிலும், சச்சின் பேபி 12 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் சுரேஷ் குமார், முகேஷ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.

அரை சதம் கடந்த சுரேஷ் குமார் 57 ரன்களில் அவுட் ஆனார். கேப்டன் ஷாருக்கான் 7 ரன்களே எடுத்தார். இதையடுத்து முகேசுடன் இணைந்த அதீக் ரஹ்மானும் அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதம் அடித்தனர். இதனால் கோவை அணி 20 முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.
நெல்லை தரப்பில் சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி.
- கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்.
நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற ஒரு அரசு பஸ்சில் நாங்குநேரியை சேர்ந்த பயணிகள் சிலர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் வழக்கு தொடர்பான வாய்தாவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த பயணிகளிடம், நீதிமன்றத்திற்கு செல்ல கண்டக்டர் 15 ரூபாய் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சில பயணிகள் 10 ரூபாய் டிக்கெட் தானே. ஏன் 15 ரூபாய் கேட்கிறீர்கள்? என கேள்வி கேட்டனர்.
மேலும் டிக்கெட் கட்டண பட்டியல் விபரத்தை பயணிகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், நாங்கள் சீனியர். எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. கேட்டால் சமாளித்து விடுவோம் என கூறியுள்ளார்.
அதற்கு பயணிகளும் வழக்கத்தை விட கூடுதலாக 5 ரூபாய் கட்டணம் கேட்கிறீர்கள். எங்கள் காசை நாங்கள் எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் நீதிமன்றத்தில் வந்து கூறுவீர்களா? என கேட்க வாக்குவாதம் வளர்ந்து கொண்டே சென்றது. பின்னர் கடுமையான வாக்குவாதம் காரணமாக அந்த பயணியிடம் இருந்து 15 ரூபாய் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு 10 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய் ஆகியவற்றை பயணியிடம் கண்டக்டர் திருப்பி ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வுகளை சக பயணிகள் செல்போனில் பதிவு செய்து தற்போது சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.
- இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிறப்பு பூஜை
இந்த திருவிழாவிற்காக காந்திமதி அம்பாள்-சுவாமி சன்னதியில் இருந்து வெள்ளி சப்பரத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை காந்திமதி அம்பாள் கோவிலுக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதன்பின் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்திமதி அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி திருவிழாவின் 10 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் வருகிற 15-ந்தேதியும், முளை கட்டும் உற்சவம் வருகிற 21-ந் தேதியும் நடைபெறுகிறது.
- தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும்
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை ரவுண்டானா வில் சி.ஐ.டி.யு. சார்பில் இன்று சாலை மறியல் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மாரியப்பன், செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் பீர் முகம்மது ஷா, மாவட்ட இணை செயலாளர் சரவண பெருமாள், துணை தலைவர் சுடலைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், தினக்கூலி துப்பரவு தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.730 நிர்ணயம் செய்ய வேண்டும், பல வருடங்கள் சுய உதவிக்குழு மூலம் பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்துடன் கூடிய வாரவிடுமுறை அளிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் மறியல் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.
- பாளை மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது.
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவாகவே வருவதால் விலை யேற்றத்துடன் காணப் படுகிறது. பாளை காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்ப னை செய்யப் படும் என்று கூட்டுற வுத்துறை அறிவித்தது.
ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேஷன் கடை களில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
நெல்லையில் 15 கடைகளில்...
இந்நிலையில் இன்று முதல் நெல்லை மாவட் டத்திலும் சுமார் 15 ரேஷன் கடை களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் நெல்லை மாவட்ட நுகர் வோர் மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் நெல்லை டவுனில் 7 கடைகளிலும், டயோசீசன் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் சமாதானபுரம், மகாராஜ நகர் ஆகிய 2 கடைகளிலும், நெல்லை நுகர்வோர் பண்டகசாலை சார்பில் அன்புநகர், பெரு மாள்புரம் என 2 கடைகள் உள்பட மொத்தம் 15 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படுகிறது.
இதற்காக முதற்கட்டமாக 400 கிலோ தக்காளி கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளில் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடையில் ரூ.60-க்கு தக்காளி கிடைப்பது பொது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






