என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli Govt Bus"

    • வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
    • போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற ஒரு அரசு பஸ்சில் நாங்குநேரியை சேர்ந்த பயணிகள் சிலர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் வழக்கு தொடர்பான வாய்தாவுக்கு சென்றுள்ளனர்.

    அப்போது அந்த பயணிகளிடம், நீதிமன்றத்திற்கு செல்ல கண்டக்டர் 15 ரூபாய் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சில பயணிகள் 10 ரூபாய் டிக்கெட் தானே. ஏன் 15 ரூபாய் கேட்கிறீர்கள்? என கேள்வி கேட்டனர்.

    மேலும் டிக்கெட் கட்டண பட்டியல் விபரத்தை பயணிகள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், நாங்கள் சீனியர். எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. கேட்டால் சமாளித்து விடுவோம் என கூறியுள்ளார்.

    அதற்கு பயணிகளும் வழக்கத்தை விட கூடுதலாக 5 ரூபாய் கட்டணம் கேட்கிறீர்கள். எங்கள் காசை நாங்கள் எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் நீதிமன்றத்தில் வந்து கூறுவீர்களா? என கேட்க வாக்குவாதம் வளர்ந்து கொண்டே சென்றது. பின்னர் கடுமையான வாக்குவாதம் காரணமாக அந்த பயணியிடம் இருந்து 15 ரூபாய் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு 10 ரூபாய் டிக்கெட் மற்றும் 5 ரூபாய் ஆகியவற்றை பயணியிடம் கண்டக்டர் திருப்பி ஒப்படைத்தார்.

    இந்த நிகழ்வுகளை சக பயணிகள் செல்போனில் பதிவு செய்து தற்போது சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்.

    ×