search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road work V.S.R. Jagathees"

    • ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான தார்ச்சாலை பணிகள் தொடங்கப்பட்டது.
    • மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பி லான தார்ச்சாலை பணி களை நெல்லை மாவட்ட பஞ்சா யத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    பணிகள் தொடக்கம்

    அதன்படி முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்ததில் குமாரபுரம் பஞ்சாயத்து நாங்குநேரி -இடையன்குடி சாலையில் இருந்து நாலந்து லா செல்லும் சாலை, ராதாபுரம் பஞ்சாயத்து வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் செல்லும் சாலை, வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் பாப்பான் குளம் வழியாக பாவிரித்தோட்டம் செல்லு ம் சாலை மற்றும் வள்ளியூர் விஜயாபதி சாலை முதல் சுப்பிர மணிய பேரி வழி யாக சவுந்திர பாண்டிய புரம் செல்லும் சாலை ஆகிய தார்ச்சா லை களுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது.

    போக்குவரத்து அதிக மாக மக்கள் பெரிதும் பயன் படுத்தும் சாலைகள் இந்த திட்டத்தில் எடுக்கப் பட்டு பணிகள் தொடங்கப் பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சி லர்கள் ஜான்ஸ் ரூபா, லிங்க சாந்தி, ஒன்றிய கவுன்சி லர்கள் இசக்கி பாபு, ஜெஸி, படையப்பா முருகன், பரிமளம், மாவட்ட அறங்கா வலர் குழு உறுப்பினர் முரளி, ராதா புரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், முருகேசன், மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் கெனிஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன், வட்டார வளர்ச்சி பொறியாளர் சிவ பிராகசம், ஊராட்சிமன்ற துணை தலைவர் அனிதா பயாஸ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், ராஜன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், கஸ்தூரி ரெங்கபுரம் பாலன், அகஸ்டின், ராமையா, புளியடி குமார், முத்து, முருகேஷ், சதிஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×