search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை
    X

    டவுன் மாதா நடுத்தெருவில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி விற்பனை நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

    • தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.
    • பாளை மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது.

    ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவாகவே வருவதால் விலை யேற்றத்துடன் காணப் படுகிறது. பாளை காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்ப னை செய்யப் படும் என்று கூட்டுற வுத்துறை அறிவித்தது.

    ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேஷன் கடை களில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லையில் 15 கடைகளில்...

    இந்நிலையில் இன்று முதல் நெல்லை மாவட் டத்திலும் சுமார் 15 ரேஷன் கடை களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் நெல்லை மாவட்ட நுகர் வோர் மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் நெல்லை டவுனில் 7 கடைகளிலும், டயோசீசன் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் சமாதானபுரம், மகாராஜ நகர் ஆகிய 2 கடைகளிலும், நெல்லை நுகர்வோர் பண்டகசாலை சார்பில் அன்புநகர், பெரு மாள்புரம் என 2 கடைகள் உள்பட மொத்தம் 15 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படுகிறது.

    இதற்காக முதற்கட்டமாக 400 கிலோ தக்காளி கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளில் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடையில் ரூ.60-க்கு தக்காளி கிடைப்பது பொது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×