என் மலர்
தென்காசி
- சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
- மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் சாரல் மழை எதிரொலியாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று மாலை குற்றாலம் மெயின் அருவியில் திடீரென தண்ணீர் வரத்து மிகவும் அதிகரிக்க தொடங்கியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு கருதி அருவி கரையிலிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து வனப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் நேற்று மாலை முதல் இன்று வரை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மற்ற அருவிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகள் விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
- சிகிச்சை பெற்று செல்வோர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
- வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
செங்கோட்டை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இன்று அதிகாலை குண்டாறு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் செங்கோட்டை அருகே உள்ள வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென சென்று அங்கு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள சிகிச்சை பெற்று செல்வோர் வருகை பதிவேடுகளில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதற்கிடையே ஆய்வுக்கு பின்னர் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததற்காக வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.
- குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலாப் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.
தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியிலும் நேற்று மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கும் சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலத்தில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- தண்ணீர் வரத்தை பொறுத்து மற்ற அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப ஐந்தருவி, மெயின் அருவியில் ஓரமாக நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் மலைப்பகுதிகளுக்குள் பெய்துவரும் கனமழையின் காரணமாக குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தண்ணீர் வரத்தை பொறுத்து மற்ற அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிற்றருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் பலரும் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றாலம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் அபாய ஒலி எச்சரிக்கை விடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். மற்ற அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையில் தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தே காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிற்றருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு வரும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
- பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழைய குற்றால அருவி. இந்த அருவிக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபடுவார்கள்.
பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் இரவு 8 மணிக்கு பிறகு கட்டுப்பாட்டை மீறி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குளிக்கும் நேரத்தை வனத்துறையினர் குறைத்தனர். அதாவது காலை 6 மணி முதல் மாலை 6.30 வரை மட்டுமே பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் கூடுதல் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
- அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது.
- தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டும் நிலைக்கு சென்றுள்ளது.
கடந்த வாரம் வரையில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது.
தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
இருப்பினும் அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குற்றாலம் பகுதிகளுக்கு வருகை புரிந்து குற்றால அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
- மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.
- மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். இன்று தென்காசி குற்றாலத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் கூறியதாவது:-
இரண்டு முறை 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்தபோது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்துள்ளோம். 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாருகின்ற சூழ்நிலையை உருவாக்கி தந்தோம்.
வறட்சி காலத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்தது அதிமுக அரசாங்கம்.
விவசாயிகளுக்கென அதிமுக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. தற்போதுள்ள திமுக அரசு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறதா?
கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை.
தமிழகத்தில் சிறுமி முதல் பாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. கஞ்சா விற்காத இடமே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்தில் இனிமேல் பாதுகாப்பு கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அதிமுக ஆட்சியில் விலையில்லா மடிக்கணினி கொடுத்தோம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. இதில் என்ன அரசியல் காழ்ப்புணர்ச்சி தேவை?. 10 ஆண்டுகளில் 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாணவச் செல்வங்கள் அறிவுப்பூர்வமான கல்வி படிக்கும் சூழ்நிலையை அமைத்து கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதை நிறுத்திவிட்டாங்க.
மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக அரசு அமையும். மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட லேப்டாப் கொடுக்கப்படும். இந்த திட்டம் தொடரும்.
அம்மா மினி கிளினிக். இதிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி. எங்கெல்லாம் ஏழை மக்கள் வசிக்கிறார்களோ, அந்த பகுதியை தேர்ந்தெடுத்து அம்மா மினி கிளிக்கை திறந்தோம். அதையும் மூடியதுதான் இந்த ஸ்டாலின் ஆட்சி. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். அம்மா மினி கிளினிக் திட்டம் தொடரும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை தென்காசி மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
- மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று மதியம் அன்னதானம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் விஷ வண்டு (கடந்தை குளவி) கூடு இருந்த நிலையில், அந்த கூடு திடீரென கலைந்து அதில் இருந்து வண்டுகள் அங்கும், இங்குமாய் உலாவிய நிலையில் அந்த வழியாக சென்ற 5-க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் பிள்ளை (வயது 85) மற்றும் அவரது மனைவி மகராசி(78) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டு கூட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனைதொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இன்று சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுவதாய் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியில் தண்ணீர் வரத்து சீரான உடன் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என குற்றாலம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் குற்றாலம் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
- மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது.
- விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுந்து வந்தது. இந்த நிலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தடுப்புக் கம்பிகள் வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.






