தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம்

தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார். கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுவாமி தரிசனம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அங்கிருந்து தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார். அவர் இன்று காலை தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதற்காக காலை கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார். கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் காசி விஸ்வநாதர் சன்னதியில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

சாமி தரிசனத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, ஷோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com