என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அருவிக்கரை வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
தென்காசி மாவட்டத்திற்கு 'ஆரஞ்சு அலர்ட்' - குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிப்பு
- குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
- பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






