என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்
- மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது.
- கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 பேர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புதுமார்கெட் பகுதியில் இருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும் பஸ்சின் படியிலே தொங்கியபடியும் மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது எனவும். இதனால் கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






