என் மலர்tooltip icon

    தேனி

    • தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்ப ட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதி கூலி வேலை செய்து வந்தனர்.

    தோட்ட வேலைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
    • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்ைத சேர்ந்தவர் மாரிமுத்து (வயது35). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு 3 குழந்தைகளுடன் பெற்ேறார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தெரிவிக்கையில், அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். நாளை ஆடி 18-ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டபடிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது.
    • வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம்.

    தேனி:

    தேனி பங்களாமேட்டில் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது,

    தான் முதல்-அமைச்சர் ஆனவுடன் 3 மாதங்களில் கொடநாடு குற்றவாளிகளை கண்டுபிடிப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் 30 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் யார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    எனவே இந்த வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை உணர்த்தும் வகையில் தான் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இனியும் காலம் தாழ்த்தினால் அ.ம.மு.க. தொண்டர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.

    எப்போதுமே மின்இணைப்பு துண்டிக்கப்படாமல் செயல்படும் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது மட்டுமின்றி, சிலமணிநேரம் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பதவி ஆசை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் அக்கறைகாட்டாமல் தனது பதவியை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார். நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவது தெரிந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் எங்களை கேலி செய்கின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து கண்டன கோஷங்களை ஓ.பி.எஸ், தினகரன் எழுப்ப, அதனை தொண்டர்கள் மீண்டும் கூறி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

    • பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
    • எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா (33) என்ற மனைவியும், ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று இரவு பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சின்னமனூர்-உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது கம்பத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு ஆம்னிபஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் மீது ஆம்னிபஸ் மோதியது. பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

    அப்போது பஸ்சில் பிரேக் பிடிக்காததால் உராய்வு ஏற்பட்டு டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்ததும் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பயணிகள் அனைவரும் கூக்குரலிட்டபடி பஸ்சை விட்டு இறங்கினர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை பரவவிடாமல் அணைத்தனர். அதன் பிறகு பஸ்சுக்கு அடியில் உடல் கருகிய நிலையில் இருந்த ஏட்டு ராமகிருஷ்ணன் உடலை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    சின்னமனூர்:

    ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதாஅண்ணாதுரை, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தேனி மாவட்ட விவசாயதொழிலாளர் அணிமாவட்டசெயலாளர் செந்தில்குமார், உத்தமபாளையம் வட்டாட்சியர் பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
    • காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் தேவதானப்பட்டி பைபாஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.

    மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி தேனிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச்சென்றவர் காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
    • இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.

    ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.

    நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழி லாளி. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகினார். பின்னர் சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி முருகனுக்கு ஆயுள்த ண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக குருவராஜ் ஆஜரானார்.

    • பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
    • தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

    தேனி:

    கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×