என் மலர்
தேனி
- பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
- எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா (33) என்ற மனைவியும், ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று இரவு பணிமுடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சின்னமனூர்-உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே செல்லும் போது கம்பத்தில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு ஆம்னிபஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக் மீது ஆம்னிபஸ் மோதியது. பஸ்சில் முன்சக்கர டயருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பஸ்சில் பிரேக் பிடிக்காததால் உராய்வு ஏற்பட்டு டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்ததும் டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தினார். பயணிகள் அனைவரும் கூக்குரலிட்டபடி பஸ்சை விட்டு இறங்கினர். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை பரவவிடாமல் அணைத்தனர். அதன் பிறகு பஸ்சுக்கு அடியில் உடல் கருகிய நிலையில் இருந்த ஏட்டு ராமகிருஷ்ணன் உடலை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி. பிரவின் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சின்னமனூர்:
ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஒன்றிய குழு தலைவர் நிவேதாஅண்ணாதுரை, ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனுஷ்கோடி, சின்னமனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தேனி மாவட்ட விவசாயதொழிலாளர் அணிமாவட்டசெயலாளர் செந்தில்குமார், உத்தமபாளையம் வட்டாட்சியர் பால்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
- காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் தேவதானப்பட்டி பைபாஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.
மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி தேனிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச்சென்றவர் காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர்.
- இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
எனது சொந்த ஊர் தஞ்சை என்றாலும், அரசியல் பயணம் தொடங்கியது தேனி மாவட்டம் தான். இங்குள்ள நிர்வாகிகள் அனைவரையும் பெயர்சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானவன். இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸ்.சுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் 90 சதவீத விசுவாசிகள் எங்களுடன் தான் உள்ளனர். இ.பி.எஸ்.சிடம் உள்ளவர்கள் குண்டர்படை, டெண்டர் படை.
ஆனால் நம்மிடம் இருப்பவர்கள் உண்மையான தொண்டர் படை. தி.மு.க. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடித்து தண்டனை பெற்றுத்தருவோம் என்று கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளார். இந்த வழக்கு விரைவு படுத்தப்பட்டால் பல உண்மை சம்பவங்கள் நாட்டிற்கு வெளிவரும். பலர் கம்பி எண்ண நேரிடும்.
நாங்கள் பொழுது போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஜெயக்குமார் கூறுகிறார். அவர்தான் பொழுதை போக்க தினந்தோறும் பிரஸ்மீட் நடத்துகிறார். இந்த வழக்கை சிந்துபாத் கதைபோல முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைந்து விசாரித்து குற்றாவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழி லாளி. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகினார். பின்னர் சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி முருகனுக்கு ஆயுள்த ண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக குருவராஜ் ஆஜரானார்.
- பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது
- தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
தேனி:
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அ.ம.மு.க. நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தேனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி தினகரன் பேசினர். இதனால் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோர் தேனி மாவட்டத்தில் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது32). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூரில் தங்கி இருந்த தம்பதியினர் தலை ஆடிக்காக பெரியகுளம் வந்தனர்.
பின்னர் தனது மனைவியை வீட்டில் விட்டு விட்டு சின்னத்துரை திருப்பூர் செல்வதற்காக மூன்றாந்தல் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தாமரைக்குளம் பிரிவு அருகே வழிமறித்து சின்னத்துரையை பைக்கில் ஏறுமாறு கூறினர்.
அதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
- 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் வருகிற 4-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் 5 வார திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி சனீஸ்வர பகவானுக்கும், கும்பத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து 3-ம் வார திருவிழாவில் சாமிக்கு சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல், சுவாமி வீதி உலா, லாடசித்தர் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும் வருகிற 12-ந் தேதி 4-வது வார சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 14-ந் தேதி இரவு பொங்கல் வைத்து சோனை கருப்பணசாமிக்கு மதுபான படையல் பூஜை நடைபெறுகிறது.
அன்று இரவு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆடு, சேவல் பலியிட்டு கறி விருந்து நடைபெறும். பிறகு 5-வது வார திருவிழாவான 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
- தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.
- இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் காசுக்கடை சந்தில் உள்ள பஜாரில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் சம்மந்தமாக வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.
மேலும் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
- தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
கம்பம்:
கால்நடை பராமரிப்புத்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு 747 கால்நடை டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். 12 ஆண்டுகளாக பணியாற்றிய இவர்களில் 294 பேர் பணியை நிரந்தரம் செய்யாததால் ராஜினாமா செய்துவிட்டனர்.
மற்ற 454 டாக்டர்கள் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தற்காலிகமாக பணியாற்றி வரும் 454 டாக்டர்கள் பணியிடங்களையும் காலி இடங்களாக அறிவித்தது. இதனால் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த கால்நடை டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதுமாறும், 454 பேர்களுக்கும் கருணை அடிப்படையில் 50 மதிப்பெ ண்கள் வழங்கப்படும் என கால்நடைத்துறை இயக்குனரகம் தெரிவித்தது.
இதை கண்டித்து கால்நடை டாக்டர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். பின்னர் வேறு வழியின்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்றனர்.
இதில் தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 13 டாக்டர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் பலர் தமிழ் தேர்வில்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் வெற்றி பெ ற்றாலும் நேர்முகத்தேர்வில் 3:1 என்ற அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
அதில் தங்களுக்கு பணியிடம் நிரந்தரமாக்கப்படுமா? என கால்நடை டாக்டர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
- வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார்.
- பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.
தேனி:
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 24). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். புதிய பைக் வாங்கி டி.வாடிப்பட்டியில் வைத்திருந்தார்.
இந்த வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார். பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அழகர்ராஜா தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியபோதும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.
வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 49.02 அடியாக உள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.88 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






