என் மலர்
நீங்கள் தேடியது "8000 MW power"
- அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.
- இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
கூடலூர்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை இந்த ஆண்டு ஏமாற்றியது. இதனால் முல்ைலபெரியாறு அணைக்கு போதிய நீர்வரத்து வரவில்லை. ஒருசில நாட்கள் மட்டுமே மழை பெய்த நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் 121 அடியில் உள்ளது.
அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில 1736 மெகாவாட் மின்உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 8000 மெகாவாட் மின்சாரம் குறைவாகும். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் பெரியாறு அணை பகுதியில் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மெயின்அணை, பேபிஅணை, கேலரி, உபரிநீர் வெளியேறும் பகுதி, சீஸ்மோகிராப், வல்லக்கடவு ரோடு, தேக்கடி தலைமதகு பகுதி உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டார்.
அணையில் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கிய அவர் வெள்ள காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.45 அடியாக உள்ளது. வரத்து 291 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 48.19 அடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1826 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 23.46 அடியாகவும் உள்ளது.






