என் மலர்

  நீங்கள் தேடியது "sale of alcohol"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அவர்களிடம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன
  • பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம்:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை போலீசாருக்கு சிலர் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கீழவடகரை மற்றும் வடகரை பகுதியில் ரோந்து சென்றார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்க பாண்டி மற்றும் சுரேஷ் ஆகிய 2 வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களி டம் இருந்த 90 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டன. இதே போல் பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி மற்றும் டி.கள்ளிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்ச கொடி மற்றும் யோகேந்திரன் ஆகிய 2 வாலிபர்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்கு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகுளம் பகுதியில் வீடுகளில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த 4 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
  நாகர்கோவில்:

  குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

  நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்திரவிளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லி ரோந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக சகாதேவன் (வயது 60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  அருமனை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் வல்சலாம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அருளப்பன் (65), சுந்தரம்பாய் ஆகியோர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  இதேபோல் களியக்காவிளை, தக்கலை, ஈத்தாமொழி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்புக்குட்டன் (57), நாகராஜன் (31), கணேசன் (61) ஆகியோரை அனுமதியின்றி மது விற்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 18 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
  ×