என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low Vaigai Dam water level"

    • மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது.
    • தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இதனை நம்பி ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பயிர்சாகுபடி செய்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ெதாடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லை. மேலும் வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கண்டமனூர் பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்வதால் மூலவைகையாற்றில் தண்ணீர் வரத்து குறைவாகவே உள்ளது.

    இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சீராக குறைந்த நீர்மட்டம் இன்று காலை 50 அடிக்கும் கீழ் சரிந்து 49.57 அடியாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 64 அடிக்கு மேல் இருந்தால் 58-ம் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது மிகவும் குறைந்தே நீர்மட்டம் உள்ளது. இதனால் குடிநீ ருக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. 404 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.17 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.8, தேக்கடி 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால் அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்த ப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.85 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.55 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுைர மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்தது.

    அதன் பிறகு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.

    1544 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.45 அடியாக உள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 454 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1778 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ×