என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)
50 நாட்களுக்கு பிறகு 70 அடிக்கு கீழ் குறைந்த வைகை அணை நீர் மட்டம்
- பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது.
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுைர மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தொடர் மழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் உயர்ந்தது.
அதன் பிறகு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர் வரத்து அதிகரித்ததால் கடந்த 50 நாட்களாக 70 அடிக்கும் மேல் நீடித்து வந்தது. இந்த நிலையில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து சரிந்தது. இதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 69.85 அடியாக குறைந்தது.
1544 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.45 அடியாக உள்ளது. மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் 454 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1778 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.






