என் மலர்
நீங்கள் தேடியது "மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்"
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற வாலிபர் திடீரென மாயமானார்.
- கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டதால் மாயமான வாலிபரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முகமது தாவூது. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் இம்ரான் ரியாஸ் (23). இவர் படித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மாயமானார்.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த தேவாரம் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை தனது மகனை காணவில்லை என புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் தேவாரம்-பாளையம் இடையே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இன்று ஒரு வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு இறந்து கிடந்த வாலிபரின் உடலை மேலே கொண்டு வந்தனர். அப்போது கிணற்றில பிணமாக கிடந்த வாலிபர் முகம் அடையாளம் காணமுடியாக அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. எனவே இறந்தவர் இம்ரான் ரியாசா? அல்லது வேறு நபரா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






