சின்னமனூர்- சீப்பாலக்கோட்டை சாலையில் லாரி, ஆம்னி பஸ்கள்- கடும் போக்குவரத்து நெரிசல்

காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
Published on

சின்னமனூர்:

சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் காந்தி சிலை முதல் முத்தாலம்மன் கோவில் வரை அதிக கடைகள் உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த நிலையில் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவிகள் மட்டுமல்லாது காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அதிவேகமாக வாகனங்கள் வருகின்றன. இதனால் சாலையை கடக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார்களை நியமித்து விபத்துகளை தடுக்க வேண்டும். காந்திசிலை, தேரடி, மார்க்கையன்கோட்டை, ரவுண்டானா ஆகிய பஸ் நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னமனூர் நகராட்சி ஆணையாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com