search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Information Technology"

    • தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டபடிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

    அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

    மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
    • மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது.

    இது, மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.

    தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இவை, டைடல் பூங்கா நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலுார் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மினி டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் வரைபடத்தை பார்வையிட்டனர். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே மேல வஸ்தாசாவடியில் அமைய உள்ள

    மினிடைடல் பூங்கா 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி செலவில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி கட்டுமானபரப்பளவுடன் நிறுவப்படும்.

    இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தவும் மற்றும் அப்பகுதிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும்.

    ×