search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian National Congress"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிலிந்த் தியோராவின் தந்தை முரளி தியோரா 2014ல் காலமானார்
    • காங்கிரஸ் கட்சியுடனான 55 வருட உறவை தியோரா குடும்பம் முடித்து கொண்டது

    காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

    இன்று காங்கிரஸின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.

    யார் இந்த மிலிந்த் தியோரா?

    காங்கிரஸ் கட்சி ஆதரவாளராக நீண்ட காலம் இருந்து வந்தவர் முரளி தியோரா (Murli Deora). மும்பை மேயராகவும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராகவும், கேபினட் மந்திரியாகவும் பதவி வகித்த முரளி தியோரா 2014ல் காலமானார்.

    முரளி தியோராவின் மகன், மிலிந்த் தியோரா.

    47 வயதாகும் மிலிந்த் தியோரா (Milind Deora), தந்தையை போல் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக இருந்தார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

    2004ல் தெற்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று, பா.ஜ.க. வேட்பாளரை விட 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    2011ல் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக பதவியேற்றார்.

    2012ல் கப்பல் போக்குவரத்து துறைக்கான அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

    மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று கட்சியின் அமைப்புகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கொண்டு வந்தார்.

    2019ல் மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

    இன்று, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதன் மூலம் 55 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் இருந்த உறவை தியோரா குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்தது.


    2019லிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஹர்திக் படேல், அஷ்வனி குமார், சுனில் ஜகார், ஆர்பிஎன் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, அல்பேஷ் தாகோர், அனில் ஆன்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விட்டனர்.

    மிலிந்த் தியோராவின் விலகலுடன் 2019லிருந்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எரிக், பருவநிலை மாற்றங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை கூறுபவர்
    • இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்களை ராகுல் கூறினார் என்றார் எரிக்

    வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo).

    இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களின் செயல் இயக்குனராக பதவி வகித்தவர். இவர், பருவநிலையின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் செயலாற்ற வேண்டியது குறித்து தனது கருத்துக்களை உலகெங்கும் கூறி வருகிறார். கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்த நேரிடும் என்றும் இதனால் இந்தியாவில் காடுகள் அழியும் நிலை அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றார்.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:

    ராகுல் காந்தி, நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான எர்னா ஸோல்பர்க் (Erna Solberg) மற்றும் ஸ்வெர் மிர்லி (Sverre Myrli) ஆகியோருடன் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரையும் சந்தித்தார். அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது.

    இவ்வாறு அக்கட்சி தெரிவித்திருந்தது.

    நார்வே சென்ற ராகுல், எரிக் சொல்ஹெய்மையும் அங்கு சந்தித்தார்.

    இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது:

    நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.


    • மாநாட்டின் மையக்கருத்தாக "வசுதைவ குடும்பகம்" எனும் சித்தாந்தம் இடம்பெறுகிறது
    • 2014, 2018 ஜி20 மாநாடுகளில் ஊழலுக்கு எதிராக மோடி பேசினார் என்றார் ஜெய்ராம் ரமேஷ்

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் தற்போது நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இம்மாநாடு நாளையுடன் முடிவடைகிறது.

    இம்மாநாட்டின் மையக்கருத்தாக "வசுதைவ குடும்பகம்" எனும் "உலகம் முழுவதும் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் சித்தாந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முழக்கத்தை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்க அமைப்பு சில மாதங்களுக்கு முன்பாக அறிக்கை ஒன்றில் வெளியிட்டது.

    இதனை குறிப்பிட்டு பிரதமர் மீது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    "2014 ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி கருப்பு பண பதுக்கலுக்கான பாதுகாப்பு புகலிடங்களை ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஊழல்வாதிகளை காக்கும் விதமாக உள்ள வங்கி பரிவர்த்தனை நடைமுறை சிக்கல்களை மாற்றவும் கோரியிருந்தார். 2018 ஜி20 மாநாட்டில் சொந்த நாட்டில் பொருளாதார குற்றங்களை புரிந்து விட்டு அயல்நாடுகளுக்கு தப்பியோடும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோரியிருந்தார்."

    "ஆனால், அதானி குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செபி, சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் மற்றும் தீவிர பணமோசடி விசாரணை அலுவலகம் ஆகியவை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்."

    "ஜி20 மாநாட்டிற்கான முழக்கமாக 'ஓரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பது இருக்கலாம். ஆனால், பிரதமர் 'ஒரே மனிதன், ஒரே அரசாங்கம், ஒரே வர்த்தக நிறுவனம்' எனும் நோக்கத்தைத்தான் நம்புவதாக தெரிகிறது," என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார்.

    அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க காங்கிரஸ் கோரி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • இது விண்வெளி சரித்திரத்திலேயே மகத்தான சாதனையாக கருதப்படுகிறது
    • 60-களிலிருந்தே சுயசார்பை மட்டுமே நம்பி இஸ்ரோ செயல்பட்டு வருகிறது

    இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தது. சந்திரயான் எனும் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கடந்த 2 முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

    இந்நிலையில், கடந்த ஜூலை அன்று சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வானில் வெற்றிகரமாக செலுத்தியது.

    சந்திரயான்-3 நேற்று மாலை 06:04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவை தொட்டது.

    உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவும் இதே முயற்சியை சில நாட்களுக்கு முன்பு செய்ய முயன்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.

    எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது.

    இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இஸ்ரோவை புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    இஸ்ரோவின் நேற்றைய மகத்தான வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த சாதனையானது அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை உற்சாகமடைய செய்யும் ஒரு பெருமைக்குரிய விஷயம். இஸ்ரோவின் நிகரற்ற திறமை பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டது.

    ஒன்றுபட்டு முயற்சிக்கும் மதிப்பு வாய்ந்த பல தலைவர்கள் எப்போதுமே இஸ்ரோவில் இருந்து வருகின்றனர்.

    சுயசார்பை மட்டுமே நம்பி 60-களின் தொடக்கத்திலிருந்தே இஸ்ரோ பல வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த உற்சாகமான தருணத்தில் இஸ்ரோவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

    ×