ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவில் சிறப்பு பயிற்சி

தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டபடிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெற்றுதருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியினை பெற 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

மேலும் இதுதொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com