என் மலர்
தேனி
- வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
- மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக முக்கிய அணைகள், கண்மாய்கள், குளங்கள் நிரம்பியது. இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். போடி விசுவாசபுரம் பகுதியில் தென்னை, வாழை, செவ்வந்திப்பூ உள்ளிட்ட விவசாயம் அதிக அளவு நடைபெற்று வருகிறது. இந்த வயல்களில் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
பயிர்கள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி விட்டதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் மேலசொக்கநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர். குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் பெரியகுளம் அருகே நெல் வயலுக்குள் தண்ணீர் புகுந்ததில் 20 ஏக்கர் மதிப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கீழவடகரை பகுதியில் உள்ள ஆண்டிக்குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்களை சூழ்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் தேனி முல்லை நகர் காலனியிலும் தண்ணீர் அதிக அளவு குடியிருப்புகளை தேங்கியதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்.
- கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட நியமன அலுவலர் ராகவன் உத்தரவின் பேரில் பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஜெயசீலன் மற்றும் போலீசார் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.5000 வீதம் 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார்.
- ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் குள்ளப்புரத்துக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற அவர் மாயமானர்.
அவரது உறவினர்கள் தேடி பார்த்தபோது கம்பம் இ.பி. ஆபீஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே குள்ளப்பகவுண் டன்பட்டியை சேர்ந்த முத்துமணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மன வெறுத்த முத்துமணி விஷ மாத்திைர தின்று மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முருக்கோடை ராயர்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து தனது மனைவியுடன் பேத்தியை பார்க்க புறப்பட்டார்.
அப்போது 2 வது மகளான 10ம் வகுப்பு படிக்கும் கோபிகா (14) என்பவர் தானும் உடன் வருவதாக கூறி உள்ளார். அதற்கு அடுத்தமுறை செல்லலாம் என்றும், வீட்டிலேயே இருக்குமாறு கூறி விட்டு முருகன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.
இதனால் மனமுடைந்த கோபிகா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.
- இதில் 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற கல்விக் கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா 100 மாணவர்களுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடனுதவிகளை வழங்கினார்.
இதில் கலெக்டர் பேசியதாவது,
வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்து வதற்காகவும் இந்த கல்வி கடன் முகாம் நடத்தப்படு கிறது.
ஆன்லைன் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் திட்டங்களை நேரில் மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், சேமிப்பு மற்றும் கடன் பற்றிய புரிதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் இந்த முகாம் நடத்தப்படு கிறது.
இதில் 100 மாணவர்க ளுக்கு ரூ.4.56 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. மேலும், கடந்த முறை நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 36 மாணவர்களுக்கு ரூ.1.8 கோடி மதிப்பிலான வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டது.
இதுவரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த 136 மாணவர்களுக்கு ரூ.6.36 கோடி மதிப்பில் வங்கி கல்வி கடன் வழங்கப்பட்டு ள்ளது. இதுபோன்ற கல்வி கடன் முகாம் குறித்து பிற மாணவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பேசினார்.
கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்ட க்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேனி மாவட்டதில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் முகாமில் கலந்துகொண்டு மாணவர்கள் இணைய தளத்தின் மூலம் சுலபமாக கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
- ஓட்டலில் 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
- புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காசிபாண்டியன்(61). இவர் அதேபகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு விக்னேஷ்(21), வாஞ்சிநாதன்(22), ரவீந்திரன்(25) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து செல்வார்கள்.
தீபாவளி பண்டிகையின்போது பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று 3 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
நாங்கள் அடிக்கடி வருவோம். எங்களுக்கு உணவு தரவேண்டும். பணம் கேட்ககூடாது என்றனர். மேலும் காசிபாண்டியனிடம் மதுகுடிக்க ரூ.1000 கேட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- போடியில் பெய்த கனமழைக்கு மூதாட்டியின் வீடு உள்பட 2 வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
- பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சிலமலை நடுத்தெரு பகுதியில் சரஸ்வதி(50) என்பவர் தனியாக வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கூலிவேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இவரது வீடு ஏற்கனவே பலம் இழந்து காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது. நல்வாய்ப்பாக சரஸ்வதிக்கு எந்த காயமும் ஏற்படடவில்ைல. இருந்தபோதும் வீட்டில் இருந்த பொருட்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது.
இதேபோல் போடி யை சேர்ந்த செல்வராஜ் தனது மனைவி செல்வி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீடு கனமழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
- சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.
தேனி:
மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.
கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.
பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.
இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குரங்கணி, கொட்டக்குடி, டாப் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் போடி அருகே உள்ள அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளை கொண்டு செல்லவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கள்ளிப்பட்டி, கெங்குவார்பட்டி, மஞ்சளாறு அணை, தேனி, லெட்சுமிபுரம், வீரபாண்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இதனால் கும்பக்கரை அருவியில் இன்று 21-வது நாளாக பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுருளி அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் அங்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. போடி அருகே உள்ள ராஜவாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு தண்ணீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட பாசனத்துக்காக 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பூர்வீக பாசனத்துக்காக மேலும் கூடுதலாக 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்று படுகையில் உள்ள உறைகிணறுகளை நிரப்பும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 17410 கன அடி தண்ணீரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 7165 கன அடி தண்ணீரும், மதுரை மாவட்டத்துக்கு 3970 கன அடி தண்ணீரும் என 3 மாவட்டத்துக்கும் சேர்த்து 28545 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் டி.வாடிப்பட்டி, தருமத்துப்பட்டி ராமநாயக்கன்பட்டி, செக்காபட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, அணைப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூர், துவரிமான், மதுரை, விரகனூர், சிலைமான், திருப்புவனம், எமனேஸ்வரம், பரமக்குடி, பார்த்தீபனூர் வழியாக ராமநாதபுரம் பாசன பகுதிக்கு செல்கிறது.
மேலும் தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள முட்செடிகள், அமலைச் செடிகள் ஆகியவையும் அடித்துச் செல்லப்பட்டு பூர்வீக பாசனத்துக்காக தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 67.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 2477 கன அடி. நீர் திறப்பு 6099 கன அடி. நீர் இருப்பு 5238 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 134.90 அடியாக உள்ளது. நேற்று 133.75 அடியாக இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1284 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4118 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5843 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.93 என முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 331 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
பெரியாறு 30.4, தேக்கடி 38.4, கூடலூர் 11.4, உத்தமபாளையம் 9.2, சண்முகாநதி அணை 18.6, போடி 47.8, மஞ்சளாறு 8, சோத்துப்பாறை 40, பெரியகுளம் 29, வீரபாண்டி 46, அரண்மனைப்புதூர் 27, ஆண்டிபட்டி 17.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூா் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த வேண்டுமென நோயாளி களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனா்.
சின்னமனூர் அருகே பூலாநந்தபுரம், சீலைய ம்பட்டி, அப்பிப்பட்டி, வேப்பம்பட்டி, காமாட்சி புரம், எரசை, மாா்க்கை யன்கோட்டை. குச்சனூர், அழகாபுரி. உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இருள் சூழ்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறு கின்றன.
மது அருந்துதல், கஞ்சா விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
இதனால் உடனடியாக இந்த அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் பகுதி 2 கேட்டிற்கும் காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
- இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் தெரிவித்தனா்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த எரசக்கநாயக்கனூா், சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைக ளில் மது அருந்திவிட்டு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகி ன்றனா்.
இது தவிர தினமும் மது போதையில் வாகனங்களை இயக்குவோரால் விபத்து க்கள் ஏற்படுவதுடன், பல இடங்களில் தகராறிலும் ஈடுபடுகின்றனா்.
இதனால் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கி ன்றனா்.
இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்த மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நின்றுவிட்டது. தற்போது நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
போடி, உத்தமபாளையம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக அதன் முழுகொள்ளளவிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. வரத்து 1284 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5575 மி.கனஅடி.
வைகை அணையின் நீர்மட்டம் 67.82 அடி, வரத்து 1690 கனஅடி, திறப்பு 2099 கனஅடி, இருப்பு 5208 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடி, சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.60 அடி, வரத்து மற்றும் திறப்பு 142 கனஅடி.
பெரியாறு 16.2, தேக்கடி 13.6, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 18.4, சண்முகாநதி அணை 7..8, போடி 52.4, வைகை அணை 12, மஞ்சளாறு 46, சோத்துப்பாறை 47, பெரியகுளம் 67, வீரபாண்டி 27.6, அரண்மனைப்புதூர் 12.6, ஆண்டிபட்டி 6.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.






