உத்தமபாளையத்தில் ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய 3 பேர் கைது

ஓட்டலில் 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.புகாரின்பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காசிபாண்டியன்(61). இவர் அதேபகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு விக்னேஷ்(21), வாஞ்சிநாதன்(22), ரவீந்திரன்(25) ஆகிய 3 பேரும் அடிக்கடி வந்து செல்வார்கள்.

தீபாவளி பண்டிகையின்போது பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டியுள்ளனர். மேலும் சம்பவத்தன்று 3 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

நாங்கள் அடிக்கடி வருவோம். எங்களுக்கு உணவு தரவேண்டும். பணம் கேட்ககூடாது என்றனர். மேலும் காசிபாண்டியனிடம் மதுகுடிக்க ரூ.1000 கேட்டனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com