என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) ஈஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகள், வாய்க்கால்கள் சீரமைப்பு, பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள இடையூறுகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விவசாயிகள் உரிய தகவல் தெரிவிப்பதற்கு ஏதுவாக அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள், தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றில் வடகிழக்கு பருவ மழை கண்காணிப்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எனவே, விவசாயிகள் பருவ மழையால் ஏற்படும் பிரச்சனைகளான வயலில் நீர் தேங்குதல், வடிகால் பிரச்சனைகள், பூச்சி நோய் தாக்குதல்கள் ஆகியவை குறித்த தகவல்களை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் தொடர்பு எண் விவரம்:

    தஞ்சாவூர் - 6379399728, பூதலூர் - 9443336758, திருவையாறு - 8189956026, ஒரத்தநாடு - 9942237587, திருவோணம் - 9600082492, பட்டுக்கோட்டை - 8526062230, மதுக்கூர் - 9943387147, பேராவூரணி - 6381918376, சேதுபவாசத்திரம் - 9443785789, பாபநாசம் - 7904069083, அம்மாப்பேட்டை - 9344072899, கும்பகோணம் - 8754243626, திருவிடைமருதூர் - 9751786010, திருப்பனந்தாள் - 9444846155, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் - 04362 - 267679 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கான பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள நவம்பர் 22 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்ப ட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் தங்கள் நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் - திருச்சி ரெயில் பயண நேரத்தை மாற்ற வேண்டும்.
    • திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும்

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ரெயில் பயணிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு சங்கத் தலைவா் அய்யனாபுரம் நடராஜன் தலைமை வகித்தாா்.

    செயலா் வக்கீல் ஜீவக்குமாா் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தஞ்சாவூா் ரெயில் நிலையத்தில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூா் ரெயில் நிலைய பின்பகுதி நுழைவு வாயில் அருகேயுள்ள பயணச் சீட்டு வழங்கும் மையத்தை 24 மணிநேரமும் செயல்பட வைத்து, அங்கு முன்பதிவு வசதியும் செய்து கொடுக்க வேண்டும்.

    வண்டி எண் 06739 காரைக்கால் - திருச்சி ரெயில் மாலை 5.15 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்து புறப்படுகிறது.

    அரசு ஊழியா்கள், வங்கி ஊழியா்கள், பணி முடிந்து மாலையில் வீடு திரும்ப வசதியாகவும், மாணவ, மாணவிகள் செல்ல வசதியாகவும் மாலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும்.

    பயணிகளுக்கு பயன்படும் வகையில் வண்டி எண் 06646 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரெயில் காலை 8 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்படும் விதமாக பயண நேரத்தை மாற்ற வேண்டும்.

    திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.05 மணிக்கு பிறகு 11 மணிக்கு சோழன் விரைவு ரெயில்தான் உள்ளது.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ரெயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் உறுப்பினா்கள் கண்ணன், திருமேனி, செல்லகணேஷ், உமா்முக்தாா், பைசல்அமகது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
    • மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    சுவாமிமலை:

    கார்த்திகை முதல் தேதியில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பசுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று கார்த்தினை முதல் தேதி என்பதால் கும்பகோணம் யானையடி அய்யனார் கோயிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    திருவிடைமருதூர் தாலுக்கா மணலூர் அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    மண்டல விரதத்தை தொடங்குவதற்காக குருசாமியின் முன்னிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    சுவாமிமலையில் அய்யப்ப பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி காவி மற்றும் கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

    கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் மாநகரில் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.
    • கல்லுக்குளம் நகர்ப்புற சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழக அளவில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லுக்குளம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில், தஞ்சாவூர் மாநகரில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புசாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன.

    தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.

    புற நோயாளிகள் வருகை, உள்நோயாளி அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், கருப்பைவாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத்துக்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோவுக்கும் அதிகமான எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

    இதில், அக்டோபர் மாதத்துக்கான தரவரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இரண்டாமிடத்தையும், மகர்நோன்புசாவடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் நான்காமிடத்தையும், சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.

    இது தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி ஆகியோர் பாராட்டினர்.

    • கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுநாள் வாரவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பொது மக்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்ப ட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பஸ்கள் என கூடுதலாக இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மொத்தம் 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 19 , 20 ஆகிய தேதிகளில் சென்னை தடத்தில் 100 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 75 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 19, 20 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறை ப்பூண்டி, வேதாரணியம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்க ளிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது.

    மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்த ப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை நவம்பர் 18-ந்தேதி (சனிக்கிழமை) பேராவூரணி நகர் பகுதி, கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், குப்பத்தே வன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், மரக்கா வலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபா லக்காடு, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்ற ம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால், படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மின்தடை தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.
    • கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    பூதலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சரண கோஷங்களை முழக்கி விரதம் அனுசரிக்க தொடங்குவது வழக்கம். அதை ஒட்டி இன்று காலை வடக்கு பூதலூர் ஆனந்த விநாயகர் ஆலயத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய குவிந்தனர்.

    ஸ்ரீ ஆனந்த விநாயகர் சன்னதியின் முன்னர் வாழை இலை விரிக்கப்பட்டு அதில் பொங்கல், அவல், பொட்டுக்கடலை, பூ,விபூதி, குங்குமம், வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்தது.

    ஐயப்ப குருசாமி தங்கமணி மற்றும் அப்பாராசு ஆகியோர் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைத்து சூடம் ஏற்றி சரண கோஷங்களை முழக்கி விரதம் இருக்கும் ஐயப்ப மார்களுக்கு மாலை அணிவித்தனர்.

    புதிதாக மாலை அணிய வந்திருந்தவர்களுக்கு மாலை அணிந்த பின்னர் கடைபிடிக்க வேண்டிய மரபு சார்ந்த முறைகளை ஐயப்ப குருசாமிகள் விளக்கி கூறினார்.

    தொடர்ந்து மாலை அணிய வந்து கொண்டு இருந்த பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரத முறையீடுகளை எடுத்து கூறினார்.

    • 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை மருத்து வக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராமசாமி, துறைத்தலைவர் மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன், மருத்துவத்துறை தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று முகப்பு பகுதியில் நிறைவடைந்தது.

    பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல்முறையாக முன்னோடி திட்டமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சேவைகள் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் 85 சதவீதம் பேருக்கு நோய் முற்றிய நிலையில் கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே மாதம் ஒருமுறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாக்டர்கள் பங்கேற்கும் பாத நோய் அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் கவனம் செலுத்தினால் கால் அகற்றப்படுவதில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றார்.

    • ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்காரத்தெ ருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • டெல்டா மாவட்ட ங்களில் கடந்த 4 நாட்களாகவே கனமழை கொட்டியது.
    • இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாகவே கனமழை கொட்டியது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    நேற்று மழை பெய்யவில்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஆனால் இன்று பகலில் மழையின்றி வெளியில் சுட்டெரித்தது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் 2 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளது.

    மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    மஞ்சளாறு -18.60, ஒரத்தநாடு -4.20, வெட்டிக்காடு -3.60, கும்பகோணம் -3, திருவிடைமருதூர் -2.30, அய்யம்பேட்டை -2.

    • நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரவிற்கிணங்க தஞ்சை வட்டார காங்கிரஸ் சார்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன கோட்ட அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை வட்டாரத்த லைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கில் கோ.அன்பரசன் துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிவாஜி சமூகநல பேரவைத்தலைவர் சதா. வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி இளைய பாரத், மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் கலைச்செல்வன், கோபாலய்யர், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் களிமேடு முருகானந்தம், பாரதிதாசன், சுவீதா ஞானப்பிரகாசம், மாரியம்மன்கோவில் ராமமூர்த்தி, மருங்குளம் உத்திராபதி, நாகராஜ், ஆனந்த முருகன், வீணை கார்த்தி, சிவக்குமார், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், பூக்காரத்தெரு, இருபதுகண் பாலம், கோரிக்

    குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்இ. போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் தெற்கு காலனி, புதிய வீட்டு வசதி வாரியம், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தையேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×