கும்பகோணத்தில், மூடப்பட்ட கிளை அஞ்சலகங்களை உடனடியாக திறக்க வேண்டும்

அஞ்சலகங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
கும்பகோணத்தில், மூடப்பட்ட கிளை அஞ்சலகங்களை உடனடியாக திறக்க வேண்டும்
Published on

சுவாமிமலை:

காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான அய்யப்பன் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் அனுப்ப, சிறுசேமிப்பு பதிவு அஞ்சல்கள், பார்சல் அனுப்ப முதலிய சேவை களுக்கு அஞ்சலகங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கும்பகோணம் கடைவீதி, மேலக்காவேரி, காந்தி பூங்கா, கம்பட்ட விசுவநாதர் கீழவீதி, சவுராஷ்ட்ரா நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கிளை அஞ்சலகங்கள் திடீரென மூடப்பட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தபால் அனுப்ப வேண்டும் என்றால் நீண்ட தூரம் கடந்து மகாமகக்குளம் தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, ஏழை நடுத்தர மக்களுக்கு நலன் கருதி மூடப்பட்ட கிளைஅஞ்சல கங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com