என் மலர்
சிவகங்கை
தேவகோட்டையில் போலீசார் பற்றாக்குறையால்கு ற்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வளர்ந்து வரும் நகராட்சி ஆகும்.
15 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் உள்ளது. தேவகோட்டை நகருக்குள் அன்றாடம் தேவைகளுக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
சில மாதங்களாக தேவகோட்டை நகரில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கொலை, வீடு, கோவில்களில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. பகலில் இருசக்கர வாகனங்கள் கடை வாசலில் நிறுத்தி விட்டு சிறிது நேரத்தில் வந்து பார்த்தால் வாகனங்களை காணமல் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். நகர் காவல் நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இருக்க வேண்டும். ஆனால் மிக குறைந்த அளவே காவல்துறையினர் உள்ளனர்.
திறமையான காவல்துறை அதிகாரிகள் இருந்தும் காவலர்கள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை உட்கோட்டத்திற்கு ஆய்வுக்கு வந்த ஐஜி அன்பு, செய்தியாளர்களிடம் இங்கு உள்ள காவல்துறை பற்றாக்குறை ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்றார். அப்போது டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார், துணைத் கண்காணிப்பாளர் ரமேஷ் உடன் இருந்தனர். ஆனால் இது நாள் வரை தேவகோட்டையில் போலீசார் பற்றாக்குறையாகவே உள்ளது.
நகரில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தேவகோட்டை பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். காவல் நிலையங்களில் பாதி அளவு கூட காவலர்கள் இல்லை என்பது வேதனையாக உள்ளது. நாங்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்று சமூக ஆர்வலர் ராமலிங்கம் கூறினார்.
சிவகங்கை தொகுதியில்கி ராமம் கிராமமாக சென்று மக்களிடம் குறை கேட்கும் எம்.எல்.ஏ.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக சிவகங்கை சட்டமன்ற தொகுதி முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி மக்களின் உள்ளக் குமுறல்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்.
அப்போது தி.மு.க. அரசின் ஓராண்டு சோதனைகளையும் அ.தி.மு.க.வின் நல்ல பல திட்டங்களான தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க. அரசின் ஓராண்டு சோதனைகளை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறார்.
தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள புதிய போர்வெல் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை வழியுறுத்த திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் குறை தீர்க்கும் முகாமில் பங்கு கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வழியாக தண்ணீர் எடுக்க தள்ளுவண்டி தள்ளி வந்த சிறுவனிடம் தண்ணீர் எங்கு இருந்து எடுத்து வருகிறாய்? என்று கேட்டதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருவதை தெரிவித்தான்.
தந்தையை இழந்த அந்த சிறுவனுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன் அருள்சாமி,சிவாஜி, பழனிச்சாமி கேபிராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி பகுதி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குவாரி அமைக்கப்பட்டால் மதுரை மாவட்டம் விரகனூர் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வரும் ஏராளமான குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகும்.
மேலும் வைகை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய பாசனக் கிணறுகள் வறண்டு விடும். எனவே மணல் குவாரி அமைப்பதற்கு மானாமதுரை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. ஏற்கனவே கல்குறிச்சி வைகை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில் மரங்களை அழித்து குவாரிக்கு சென்று மணல் ஏற்றி வர லாரிகள் செல்வதற்கு பாதை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மானாமதுரை வட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தை கைவிட செய்யும் நோக்கத்தில் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடந்தது.
இதில் மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன், கனிம வளத்துறை அதிகாரிகள், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். குணசேகரன், எம். குணசேகரன், கே. தங்கமணி, சிவகங்கை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுனன் உள்பட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல் கட்சியினர் குடிநீர் திட்டங்களுக்கு உலை வைக்கும் வகையில் மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயிரைக் கொடுத்தாவது மணல் குவாரிஅமைப்பததை தடுத்து நிறுத்துவோம் என ஆவேசமாகப் பேசினர்.
இதனால் கூட்டத்தில் பர பரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மானாமதுரை வட்டாட்சியர் தமிழரசன் பேசுகையில் கூட்டத்தில் பங்கேற்றறு பேசியவர்களின் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதுவரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். என்றார். கூட்டத்தில் அரசு தரப்பிலிருந்து மணல் குவாரியை ரத்து செய்வதற்கு எந்த விதமான உத்தரவாதமும் அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தை ஒத்தி வைக்க முடியாது நடத்தியே தீருவோம் என கூறி சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசியல்கட்சியினர் கூட்டம் நடந்த அறையை விட்டு வெளியேறினர்.
அதன்பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், சிவகங்கை முன்னாள் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், மணல் குவாரிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
அனைத்து அரசியல் கட்சியினர் அனைத்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராம மக்களைத் திரட்டி மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது, அதற்கான அரசு உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் 4 வழி சாலையில் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.
ேதவகோட்டை அருகே சோலார் மின் உற்பத்தி நிலைய முள்வேலியில் சிக்கி கால்நடைகள் இறக்கின்றன.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம்- கல்லல் சாலையில் தனியார் நிறுவனம் சூரிய ஒளி (சோலார்) மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த இடத்தை சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகள் மேய்ச்சல் நிலம் உள்ளது. மேலும் அருகிலேயே வனப்பகுதி உள்ளதால் மான்களை அதிக அளவில் இப்பகுதியில் காண முடியும்.
வேலாயுதபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமநாதன் இவர் சுமார் 5-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரின் காளை ஒன்று மேச்சலுக்காக சென்றது. அந்த காளை சோலார் நிறுவனம்மாஅமைத்திருந்த முள் வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தது.
இதுபோன்று அந்தப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் முள் வேலியில் சிக்கி இறப்பது தொடர் கதையாக உள்ளது. தனியார் நிறுவனம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் முள்வேலி அமைத்து உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூய்மை குறித்து விழிப்புணர்வு செய்த மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் அருகே உள்ள பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன் ஆவார்.
இவர் சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்து வரும் நிலையில் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தான் பங்கேற்ற கோவில் திருவிழாவில் மக்கள் உணவருந்திவிட்டு சென்ற தட்டுகள் மற்றும் ஏனைய பொருட்களை தானே முன்னின்று அப்புறப்படுத்துத்தினார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரும் நிலையில் வாழ்வில் தனிமனிதர் ஒவ்வொருவரும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பொன்மணி பாஸ்கரன் செய்த இச்செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் மதுரை சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்து செல்லப்பட்டது பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வு செய்தனர்.
இதை பற்றி அவர்கள் கூறியதாவது:-
இந்த கல் மூன்று அடி உயரமும் 1¼ அடி அகலமும் உள்ளது. அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று 4 வரி மட்டும் எழுதப்பட்டு உள்ளது. நான்கு புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது. தற்போது வேலூர் என அழைக்கப்படும் இந்த ஊர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சைவம், வைணவம் இடையே இருந்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக, ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா சித்திரை திருவிழா. இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வில் சைவ, வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி, இத்திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும் விதமாக ஆணையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறு நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்பிக்கும் வகையில் இந்த வேலூர் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வு செய்தனர்.
இதை பற்றி அவர்கள் கூறியதாவது:-
இந்த கல் மூன்று அடி உயரமும் 1¼ அடி அகலமும் உள்ளது. அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று 4 வரி மட்டும் எழுதப்பட்டு உள்ளது. நான்கு புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது. தற்போது வேலூர் என அழைக்கப்படும் இந்த ஊர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது.
மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் சைவம், வைணவம் இடையே இருந்த பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக, ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா சித்திரை திருவிழா. இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வில் சைவ, வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி, இத்திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும் விதமாக ஆணையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறு நடைபெற்ற சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு பக்தர்கள் வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்பிக்கும் வகையில் இந்த வேலூர் கல்வெட்டு அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காரைக்குடி நகராட்சி நவீன பூங்காவை திறக்க தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
காரைக்குடி
கொரோனா காலத்தில் நோய்த்தொற்றை தவிர்க்கும் நடவடிக்கையாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பூங்காக்களை மூடுவதை வலியுறுத்தியதால் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்கா கடந்த 3 வருடங்களாக செயல்படாமல் மூடப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திவிட்டதால் பல்வேறு பூங்காக்கள் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
காரைக்குடி நகராட்சியின் இந்த நவீன பூங்கா மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. காரைக்குடி நகராட்சியில் உள்ள நவீன பூங்கா இது ஒன்றுதான். மக்கள் விடுமுறை நாட்களிலும் மாலை நேரங்களிலும் பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே இந்த நவீன பூங்காவை சுத்தம் செய்து பல்வேறு அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற நிர்வாகம் மற்றும் தலைவர் முத்துதுரையிடம் காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை அருகே எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிவகங்கை
சிவகங்கையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நென்மேனி கிராமத்தில் உள்ள கண்மா யில் வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், முருகேசன், பெரியகருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
கரிக்கட்டையான நிலையில்பிணமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்ைல.
சம்பவ இடத்தில் போலீசாருக்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையில் அந்த வாலிபரை யாரோ கொன்றுவிட்டு, அவரை அடையாளம் காணாமல் இருப்பதற்காக உடலை தீவைத்து எரித்து இருப்பது தெரியவந்தது.
அந்த வாலிபர் யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரை கொன்று எரித்த கொலையாளிகள் விவரம் தெரிந்துவிடும் என்பதால் கொல்லப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? என்பதை கண்டறிய மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாலிபரின் உடல் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில கிடப்பதால் வெளியூரில் இருந்து கடத்தி கொண்டு வந்து ெகான்று எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட போலீஸ் நிலையங்களில் வாலிபர் யாரேனும் மாயமானது குறித்து புகார் வந்துள்ளதா? என்றும் சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






