என் மலர்
உள்ளூர் செய்திகள்

விசாரணை
எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?
சிவகங்கை அருகே எரித்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சிவகங்கை
சிவகங்கையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நென்மேனி கிராமத்தில் உள்ள கண்மா யில் வாலிபர் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், முருகேசன், பெரியகருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
கரிக்கட்டையான நிலையில்பிணமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்ைல.
சம்பவ இடத்தில் போலீசாருக்கு கிடைத்த தடயங்களின் அடிப்படையில் அந்த வாலிபரை யாரோ கொன்றுவிட்டு, அவரை அடையாளம் காணாமல் இருப்பதற்காக உடலை தீவைத்து எரித்து இருப்பது தெரியவந்தது.
அந்த வாலிபர் யார்? என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரை கொன்று எரித்த கொலையாளிகள் விவரம் தெரிந்துவிடும் என்பதால் கொல்லப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? என்பதை கண்டறிய மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாலிபரின் உடல் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில கிடப்பதால் வெளியூரில் இருந்து கடத்தி கொண்டு வந்து ெகான்று எரித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட போலீஸ் நிலையங்களில் வாலிபர் யாரேனும் மாயமானது குறித்து புகார் வந்துள்ளதா? என்றும் சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






