என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முள்வேலியில் சிக்கி இறந்து கிடக்கும் மாடு.
    X
    முள்வேலியில் சிக்கி இறந்து கிடக்கும் மாடு.

    சோலார் மின் உற்பத்தி நிலைய முள்வேலியில் சிக்கி இறக்கும் கால்நடைகள்

    ேதவகோட்டை அருகே சோலார் மின் உற்பத்தி நிலைய முள்வேலியில் சிக்கி கால்நடைகள் இறக்கின்றன.
    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம்- கல்லல் சாலையில் தனியார் நிறுவனம் சூரிய ஒளி (சோலார்) மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

    இந்த இடத்தை சுற்றி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகள் மேய்ச்சல் நிலம் உள்ளது. மேலும் அருகிலேயே வனப்பகுதி உள்ளதால் மான்களை அதிக அளவில் இப்பகுதியில் காண முடியும்.

    வேலாயுதபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமநாதன் இவர் சுமார் 5-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரின் காளை ஒன்று மேச்சலுக்காக சென்றது.  அந்த காளை சோலார் நிறுவனம்மாஅமைத்திருந்த  முள் வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தது.  

    இதுபோன்று அந்தப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் முள் வேலியில்  சிக்கி இறப்பது தொடர் கதையாக உள்ளது. தனியார் நிறுவனம் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் முள்வேலி அமைத்து உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×