search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை எம்.எல்.ஏ. பொதுமக்களை சந்தித்த போது எடுத்த படம்.
    X
    சிவகங்கை எம்.எல்.ஏ. பொதுமக்களை சந்தித்த போது எடுத்த படம்.

    கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் குறை கேட்கும் எம்.எல்.ஏ.

    சிவகங்கை தொகுதியில்கி ராமம் கிராமமாக சென்று மக்களிடம் குறை கேட்கும் எம்.எல்.ஏ.
    சிவகங்கை


    சிவகங்கை சட்டமன்ற தொகுதி  மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக சிவகங்கை சட்டமன்ற தொகுதி முழுவதும்  சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி மக்களின் உள்ளக் குமுறல்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் நிவர்த்தி  செய்து வருகிறார்.

    அப்போது தி.மு.க. அரசின் ஓராண்டு சோதனைகளையும் அ.தி.மு.க.வின் நல்ல பல திட்டங்களான தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திய தி.மு.க. அரசின் ஓராண்டு சோதனைகளை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வருகிறார். 

    தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள புதிய போர்வெல் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை வழியுறுத்த திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் குறை தீர்க்கும் முகாமில் பங்கு கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வழியாக தண்ணீர் எடுக்க தள்ளுவண்டி தள்ளி வந்த சிறுவனிடம் தண்ணீர் எங்கு இருந்து எடுத்து வருகிறாய்? என்று கேட்டதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருவதை தெரிவித்தான். 

    தந்தையை இழந்த அந்த சிறுவனுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்.  அப்போது ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன் அருள்சாமி,சிவாஜி, பழனிச்சாமி  கேபிராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×