என் மலர்
சிவகங்கை
- காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.
இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,
நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- சூரக்குடி ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து ைவத்தார்.
- கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை, தி.சூரக்குடி ஊராட்சிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம், நியாய விலை கடைகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டி டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறிய தாவது:-
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பூவான்டிபட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலை யரங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2021-22ன் கீழ் ஆவுடைபொய்கை கிராமத்தில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம்,
சூரக்குடி கிரா மத்தில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்டுள்ள நியாய விலை கடை, நெற்புகப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நியாய விலை கடை, சூரக்குடி கிராமத்தில் ரூ.06.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடம் என மொத்தம் ரூ.53.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட் டுள்ள கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவ ராமன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்) முத்து மாரியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன். சூரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முருகப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், கானாடு காத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, காரைக் குடி வட்டாட்சியர் தங்க மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ஊர்காவலன், சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர், எஸ் புதூர் ஒன்றியங்களில் புதிய மின் மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- 37 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் எஸ் புதியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைரவன்பட்டி, குளத்துப்பட்டி கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாம்பட்டி கிராமத்திலும் சுமார் 27 லட்சம் 26 லட்சம் மதிப் பீட்டில் புதிய மூன்று மின்மாற்றிகளை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். இதனால் 650 மின் பயனீட்டாளர்கள் பயன்பெறு வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 68 அரசு பள்ளிகள் உள்பட 105 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 470 மாணவர்கள் மற்றும் 6323 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் குன்றக்குடி தருமை கயிலை குருமணி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்
களுக்கும் பிரான்மலை ஊராட்சி வள்ளல் பாரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 70 மாணவர்களுக்கும் கிருங்கா கோட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கும் விலையில்லா சைக்கிள் களை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சி யர் செல்லமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மின் செயற் பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர் ஜான் எப் கென்னடி, உதவி மின் பொறியாளர்கள் சையது ஹாசாலி, சுரேஷ், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான் சுப்பு, திருப்பத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன்.
சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, அவை தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் அஞ்சப்பர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், நகர கழகச் செயலாளர் கதிர்வேல், துணை ஒன்றிய செயலாளர் சிவபுரி சேகர், முத்துக்குமார், பிரான்மலை ஊராட்சி மன்ற தலைவர் ராமசுப்பிரமணியன், கிருங்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன், துணைத் தலைவர் அமுதாசண்முகநாதன், ஊராட்சி மன்றசெயலர் ஆண்டவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராசியப்பன், ஊர் அம்பலக்காரர் ஜோதி, ஆர். பாலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பெரிய பொன்னன், ஆதிமுத்து, குமார் சுப்பிரமணியன், குளத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பெருமாள், சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
- கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.
சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை அருகே நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- உயர் தர சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தும், படமாத்தூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த சரக்கு வாகனமும் கட்டுப் பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளா னது. இதில் பேருந்தில் பயணம் செய்த 27 மாணவ, மாணவிகள், 9 பேராசிரி யர்கள் காயம் ஏற்பட்டு சிவ கங்கை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்த சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் செந்தில் நாதன் உடனே சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயர் தர சிகிச்சை அளிக்க மருத்து வர்களிடம் கேட்டு கொண் டார்.
அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங் கோவன், ஒன்றிய செயலா ளர்கள் செல்வ மணி, கோபி, பழனிச்சாமி, ஜெக தீஸ்வரன், நகர் துணை செயலாளர் மோகன், பாசறை மாவட்ட பொருளா ளர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவ ராஜ், அமைப்புசாரா அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாவட்ட மாணவரணி அன்பு மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர் வாகிகள் சென்றனர்.
- சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரி சார்பில் பாரம்பரிய நடவு திருவிழா நடந்தது.
- 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் கழணி மரபுவழி உழ வர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் நடவு திருவிழா, இயற்கை விவசாயப் பயிற்சி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா என முப்பெரும் விழா எஸ்.ஆர்.பட்டிணம் கிராமத்தில் நடைப்பெற்றது.
விழாவில் ஊராட்சி தலை வர் அஜிதா நமச்சிவா யம் வரவேற்றார். சேதுபாஸ் கரா கல்விக் குழுமத் தலை வர் முனைவர் சேதுகுமணன் தலைமை தாங்கி, பாரம்பரிய நெல் நடவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் கிராமப்புற மக்களுக்கு இயற்கை விவசாய பயிற்சிகள் மற்றும் உதவிகள் தம் கல்லூரியின் மூலமாக தொடர்ந்து வழங் கப்படும் என்றும், பால் மதிப்புக்கூட்டுதல், சந்தைப் படுத்துதல் மற்றும் பால் கூட்டுறவு சங்கம் பதி விற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
கல்லல் வட்டார வேளாண்மை இணை இயக் குநர் அழரோஜா, இயற்கை வேளாண்மையில் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி னார். சேதுபாஸ்கரா கல் லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் கருப்புராஜ் இயற்கை வேளாண்மை இடுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.
குன்றக்குடி வேளாண் அறிவியல் மைய மருத்துவர் ரோமகிருஷ்ணன், கால்நடை களின் முக்கியத்து வம் மற்றும் அரசுத்திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் உழவியல் பேராசி ரியர் முனைவர் விமலேந்தி ரன் கலந்துக் கொண்டு விவசாயிகளுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், மண்வளம், நீர் பரிசோதனை குறிந்து விளக்கினார். இவ்விழாவில் 50 விவசாயிகளுக்கு காரட் தொண்டு நிறுவனத்தின் மூலமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவர் அர்ஜூன் நன்றி கூறினார்.
- இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது.
- கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
- மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமையாசிரியர்களுக்கு அதிகாரத்தை கலெக்டர் வழங்கினார்.
- புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவகங்கை
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய அடை மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சிவ கங்கை மாவட்டத்திலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மழையின் தாக்கத்திற்கு ஏற்றாற்போல் பள்ளிகளை இயக்குவது தொடர்பாக அந்தந்த பகுதி தலைமை ஆசிரியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், சூழ்நி லைக்கு தகுந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? அல்லது பள்ளிகளை நடத்தலாமா? என்று தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரி–வித்துள்ளார்.
இது சிவகங்கை மாவட்டத்தில் புதுமையான உத்தரவாக இருப்பதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- 3 நாட்கள் நடந்த மஞ்சுவிரட்டில் 99 காளைகள் பங்கேற்றன.
- மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினர்.
சிவகங்கை
சிவகங்கை காமராஜர் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் கே.டி.ஆர். கல்யாணி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காகவும் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இனைந்து நடத்தும் 3 நாள் தொடர் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன், மாநில கவுரவ தலைவர் கே.டி.ஆர். தங்க ராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் அதிகரை வேங்கை, திருப்புவனம் தமிழ்ச் சங்க வழக்கறிஞர், துணை பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மயில்வாகனம், மாநில கவுரவ ஆலோசகர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சிவ கங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினார்.
இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆயிரக்க ணக்கான பொது மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
- மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது.
- ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப் படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டு தலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வருவாய் துறை வழக்குகளும், விசா ரிக்கப்பட்டது.
தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்த வச்சலு, ஊழல் மற்றும் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றங்களில் 15 வங்கி கடன் வழக்குகளும், 91 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 31 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 27 காசோ லைகள் வழக்குகளும், 90 குடும்ப நல வழக்குகளும் இதர குற்ற வழக்குகள் 220 என மொத்தம் 474 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 11 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டது.
இதன்மூலம் ரூ.62 லட்சத்து 35ஆயிரம் வரையில் வழக்காடிகளுக்கு கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு பணியாளர்கள் செய்தி ருந்தனர்.
- குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- 250 மனுக்கள் பெறப்பட்டது
சிவகங்கை
திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பயிர் காப்பீடு தொகை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.
- தியாகியின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம் அதிகாரியின் அலட்சியத்தால் விவசாயி கள் வேதனை அடைந்துள்ள னர்.
தேவகோட்டை ஒன்றி யத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் அனைத்து கிராமங்க ளிலும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயிகள் பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் செய்து வருகின்ற னர். கடந்த சில ஆண்டுக ளாகவே பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் அதிக கடன் சுமையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரை வருவாய் உள்ள டங்கிய 14 கிராமங்களில் விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் விவசாய பணி களை மேற்கொள்ளும்போது பயிர் காப்பீடு செய்து வரு கின்றனர். ஆனால் 4 ஆண்டுகளாகவே பருவ மழை பொய்த்ததால் விளை நிலங்கள் வறண்டு காணப் பட்டது.
மோட்டார் பாசன மூலம் ஓரிரு இடங்களில் விளைச் சல் ஏற்பட்டுள்ளது. அதி காரிகள் கணக்கில் கொண்டு அந்த பகுதி முழுவதும் விளைச்சல் அடைந்துள்ள தாக கணக்கீடு செய்ததால் காப்பீடு தொகை மற்றும் நிவாரண தொகை கண்மாய் பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை கடன் மற்றும் விவசாய கடன் பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ லில் காப்பீடு தொகை கூட கிடைக்காததால் விவசாயி கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
பயிர் காப்பீடு செய்யும் பொழுது அரசு அந்நிறுவ னத்தை ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். தமிழக அரசு விவசாயி களுக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயிர் காப்பீடு வழங்காத கிராமங்க ளுக்கு காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திர போராட்ட தியாகி யின் பேரன் சிறுமடை நேரு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.






