என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • அண்ணா பல்கலைக்கழக கபடி போட்டி நடந்தது.
    • கிட் அண்ட் கிம் கல்லூரி அணி சாதனை படைத்துள்ளனர்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி கிட் அண்ட கிம் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16-வது மண்டலத்திற்கான ஆண்கள் கபடி போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து 21 அணிகள் கலந்து கொண்டன. நாக் அவுட் முறையில் நடந்த போட்டி களில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமராவதிபுதூர் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி அணியும் விளை யாடின. இதில் 15 புள்ளி வித்தி யாசத்தில் வெற்றி பெற்று ராஜ ராஜன் கல்லூரி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-ம் அரையிறுதி ஆட்டத்தில் மானகிரி கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லூரி அணியும், செந்தூரான் அணியும் விளையாடி கிட் அண்ட் கிம் கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பரபரப்பான இறுதி போட்டியில் ராஜ ராஜன் கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

    இதில் கிட் அண்ட் கிம் கல்லூரி அணியும் சிறப்பாக விளையாடி பாராட்டை பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கிட் அண்ட் கிம் கல்லூரி தலைவர் அய்யப்பன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதில் கல்லூரியின் இயக்குனர் ஜெயராஜா, முதல்வர் பார்த்தசாரதி, உடற்கல்வி இயக்குனர் பழனியப்பன், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    • 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க 52 -ம் ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் புதுவயலில் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், புதுவயல் பேரூர் செயலாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் விஜய்கணேஷ், தஞ்சை சேகர் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லாட்சி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணிணி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு 12 ஆயிரம் கோடியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வீரசேகர், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா அம்பலம், ஊரவயல் ராமு, நகர செயலாளர்கள் மெய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
    • கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.

    மானாமதுரை

    இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.

    தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.

    பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மானாமதுரை தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
    • தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டரில் இன்று விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் திரையிடப்பட்டது. 9 மணிக்கு முதல் காட்சி திரை யிடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காலை 7 மணி முதலே ரசிகர்கள் அந்த பகுதியில் திரண்டனர். 8.30 மணி அளவில் தியேட்டருக்குள் ரசிகர்கள் சென்றனர். 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. அப்போது சவுண்ட் சிஸ்டம் சரியாக வேலை செய்ய வில்லை என கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்திற்கு ரசிகர்கள் கூச்ச லிட்டப்படி இருந்தனர். சவுண்ட் இல்லாமல் படம் ஒடியதால் ரசிகர்கள் வெறுப்படைந்தனர். வெகு நேரமாகியும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ரசிகர்கள் ரகளையில் ஈடுபட தொடங்கினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகத்தினர் உடனடியாக காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து ரசிகர்களிடம் வேண்டு கோள் விடுத்து அவர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும் ரசிகர்கள் வெளியே வந்த பின்னரும் கூச்சலிட்டப்படி நின்று கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படும் என தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தெப்பகக் குளம் கீழ்க்கரையில் நடந்தது. ஒன்றிய செ யலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல மைச்சரின் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மாவட்டந்தோறும் முதல்-அமைச்சர் அறி வித்தபடி கொண்டா டப்பட்டு வருகிறது. இந்திய துணை கண்டத்தில் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை கருணாநிதி செய்துள்ளார். தனது 14 வயது முதல் 94 வயது வரை தமிழக மக்களுக்காக பணியாற்றி உள்ளார்.

    தற்போது அ.தி.மு.க. திராவிடத்தை விட்டு விட்டு பா.ஜ.க.விடம் அடிமை கட்சியாக மாறியுள்ளது. பா.ஜ.க. கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களை அ.தி.மு.க. ஆதரித்தது. தேர்தலுக்காக அ.தி.மு.க. பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் பா.ஜ.க. அரசு உள்ளது. இன்னும் 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

    மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. சாதி, மத மோதல்கள், சிறுபான்மை யினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியல் 85 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற் றப்பட்டுள்ளது. இதனை வீடு தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும். 39 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதுவே தி.மு.க.வின் பொற்கால ஆட்சிக்கு அமையும் சான்றாகும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆர்.வி.எஸ். அரங்கசாமி நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா நடந்து.
    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழா சிவ கங்கையில் கொண்டாடப் பட்டது. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் சேவியர் தாஸ், பழனிச்சாமி, கோபி, அருள்ஸ்டிபன், செல்வ மணி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்தி ணரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலா ளர் சிவதேவ்குமார், ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சரவணன்.

    காளையார் கோவில் ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, மாவட்ட கவுன்சிலர் தேவ ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ்செல்வன் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செய லாளர் சங்கர்ராமநாதன், அமைப்பு சார அணி மாவட்ட இணை செயலாளர் அழகர்பாண்டி, மாணவ ரணி அன்பு, சக்கந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
    • வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட் டுத்திட்ட சிறப்பு கணக்கெ டுப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி னார். ஆணையர் ரெங்கநா யகி முன்னிலை வகித்தார்.

    இதில் மானாமதுரை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு தூய்மைப் பணியா ளர்களுக்கு பல்வேறு திட் டங்களை செயல்படுத்துவ தற்காக அவர்களுக் கான மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான தூய்மைப் பணி யாளர்களை கண்டறிவதற் காக நடைபெறும் கணக்கெ டுப்பு முகாமில், தரைமட்ட கழிப்பறை தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியா ளர்கள், வாகனங்களில் பணிபுரிவோர், புதை சாக் கடை தூய்மை பணியில் ஈடுபடுவோர், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம், பொது கழிப்பிடங்களில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களை சேர்க்க ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்க ளுக்கு அடையாள அட்டை களை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி வழங்கினார். கணக்கெடுப் பில் ஈடுபடும் ஊழியர்களிடம் உரிய விபரங்களை தூய்மை பணியாளர்கள் வழங்கி அவர்களுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    முகாமில் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார், துப்புரவு ஆய்வாளர் பாண் டிச்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவ ராணி, பிரபு, கார்த்தி, ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி, நகர்மன்ற உறுப்பி னர்கள் வேல்முருகன், சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் சுவாமி வேடமிட்டு பக்தர்கள் வலம் வந்தனர்.
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    குலசேகரபட்டிணம் முத் தாரம்மன் கோவிலில் வரு கிற 24-ந்தேதி தசரா திரு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அங் குள்ள முத்தாரம்மனை வேண்டி கொண்டால் வேண்டியது நடக்கும் என் பது நம்பிக்கை. இதை யொட்டி, தமிழகம் மட்டு மின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான பக்தர்கள் தசரா அன்று தினம் முத்தாரம் மனை தரிசிக்க செல்வது வழக்கம்.

    அந்த வகையில், சிவ கங்கை மாவட்டம் திருப்புவ னம் அருகேயுள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த பக் தர்கள் வருடந்தோறும் தசரா திருவிழாவிற்கு காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமி கள் வேடமிட்டு செல்வார் கள். இந்தாண்டு திருவிழா–விற்காக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதமிருந்த பக்தர்கள் இன்று மாலை குலசேகரபட்டினம் செல்ல உள்ளனர்.

    இதற்காக வேடமிட்ட பக்தர்கள் திருப்புவனம், புதூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் வேடமிட்டு சென்று வழிபட்டனர். நோயாளி, அம்மன், பிச் சைக்காரன், குறத்தி உள் ளிட்ட வேடமிட்டு பக்தர் கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக வந்தனர்.

    இதுபற்றி பக்தாகள் கூறு கையில், குலசேகரபட்டினம் முத்தாரம்மனை வேண்டிக் கொண்டால் நினைத்த காரி யம் நிறைவேறும். நோய் தாக்குதல், விபத்தில் காயம டைந்தவர்கள் அம்மனை வேண்டி கொண்டு நலம் பெற்றால் நோயாளி வேட மிட்டு சென்று நேர்த்தி கடன் செலுத்துவார்கள். அதேபோல தொழிலில் நஷ் டம் அடைந்தவர்கள் பிச் சைக்காரன் வேடமிட்டு கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்து வார்கள். நாங்கள் இன்று வேடமிட்டு நகரை வலம் வந்துள்ளோம் என்றார்.

    ஒவ்வொரு வருடமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேடமிட்டு வலம் வருவார் கள். சிவகங்கை மாவட்டத் தில் திருப்புவனம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர் கள் காளி மற்றும் சுவாமிகள் வேடமிட்டு ஆண்டு தோறும் குலசேகரபட்டினம் தசரா விழாவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்

    காரைக்குடி

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை காரைக் குடியில் நடத்தினர்.நெடுஞ் சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை, உதவி கோட்டப் பொறியாளர் அரிமுந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலை வர் முத்துதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத் தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேர ணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்தி நகரில் வலம் வந்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பூமிநாதன், சாலை ஆய்வாளர்கள், பணியா ளர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • காளையார்கோவிலில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. துணை பொதுசெயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 7,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே. ஆரோக்கியசாமி தலைமை யில் நடைபெற்றது. கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆர்.எம். கென்னடி, பேரூராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி கவிராஜ், பொதுக்குழு உறுப் பினர் பி.டி.ஆர்.முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க. துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-

    இந்த ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் நூற் றாண்டு விழாவினை கொண் டாடி வருகிறோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை உலகம் முழுவ தும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். கலைஞர் ஒரு தத்துவம். சமூக நீதி எங்கு வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங் கெல்லாம் கலைஞர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    13 வயதில் தனது பொது வாழ்க்கையை துவக்கிய வர். 94 வயது இறுதி வரை மொழி, இனம், நாட்டிற்காக அயராது பாடுபட்டவர். பேரறிஞர் அண்ணா மறை வுக்கு பிறகு கழகத் தலைவராக ஆண்டுகள் கழக தலைவரா கவும் சட்டமன்ற உறுப்பின ராக வும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்துள் ளார். கலைஞர் பெரியார் தத்துவத்தை தன் உள்ளடக்கிய பிதாமகன். திராவிடம் என்பது ஒரு தத்துவம். கலை ஞர் தமிழகத்தில் இருந்து டெல்லியை ஆட்சி செய்தார்.

    ஜனநாயகத்திற்கு எப்பொ ழுதெல்லாம் ஆபத்து வந்ததோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர். சிலர் வாக்கு வங்கிக்காக அரசியல் செய்கி றார்கள். ஆனால் தலைவர் கலைஞர் கொள்கையையும், தத்துவத்தையும் விடாமல் அரசியல் செய்தார்.

    பிரதமர் மோடி தொழில திபர் அதானியுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள் ளார். இதை அமெரிக்கா விலிருந்து வெளிவரும் பத்தி ரிகை ஆதாரத்துடன் வெளி யிட்டுள் ளது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேட்டால் மோடி பதில் சொல்வதே இல்லை. மாறாக அமலாக்கத் துறை வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவர்களை நினைத்து அடக்க பார்க்கிறார். தி.மு.க. அதற்கு அஞ்சப்போவதில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தொழிலதிபர் அதானி சிறைக்குப் போவார். மோடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படு வார். 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மணிப்பூர் கலவரத்திற்கு இதுவரை பிரதமர் மோடி சிறு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை. இத்தகைய பிரச்சினைகளை மறைப்பதற்காக ஜாதி, மத மோதல்கள், சிறுபான்மை யின மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் இந்தி யாவை காப்பாற்ற முடியும். மூன்று மாதங்களாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்து வதற்காக மிகவும் சிறப்பான முறையில் மாநாடுபோல் ஏற்பாடு செய்து நடத்திய ஒன்றிய செயலாளர் ஆரோக் கியசாமி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு பாராட்டு களை தெரிவித்துக் கொள்கி றேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கே.ஆர்.பெரிய கருப் பன், முன்னாள் அமைச் சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் 7000 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவி களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

    பாக முகவர்களுக்கு கைபேசி, நலிந்த கழக முன்னோடிகளுக்கு பொற் கிழி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை-எளிய மாணவி களுக்கு கல்வி நிதி உதவி, ஆதரவற்ற தொண்டு நிறுவ னங்களுக்கு அரிசி மூட்டை கள் ஆகியவை வழங்கப்பட் டது.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன், கே.எஸ்.எம்.மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் எம்.ஜெயராமன், திருமலை முத்துராமலிங் கம், நாகனி ரவி, பூபால சிங்கம், நா.நெடுஞ்செழியன், குன்னக் குடி சுப்பிரமணியன், நகரச் செயலாளர்கள் பெரி. பாலா, க.பொன்னுச்சாமி பொதுக் குழு உறுப்பினர்கள் கரு.அசோகன்,

    பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துதுரை மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் கதி.ராஜ்குமார் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சி.முத்து, வனிதா கண்ணதாசன், ஜான் சந்தி யாகு சி.குழந்தைசாமி, எம்.முருகேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அருட் செல்வி அரசு, எஸ்தர் மேரி ஸ்டீபன்,

    இளைஞரணி ஆர். சௌந்தரராஜன், பி தினேஷ் ராஜா, பேரூர் கழகச் செய லாளர் ஜெயராமன், எ.சந்திரபோஸ் மற்றும் ஏராள மானவர்கள் கலந்து கொண் டனர். பொதுக்கூட்டத்திற் கான ஏற்பாடுகளை காளை யார் கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான வே.ஆரோக்கியசாமி தலை மையில் ஒன்றிய கழக நிர்வாகி கள் செய்திருந்தனர்.

    ×