சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
Published on

மானாமதுரை

இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.

கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.

தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.

பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com