என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • 16 பேர் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெறுகின்றனர்

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் கலை யரங்கில் நடைபெறுகிறது.

    இதில் சிறப்பு விருந்தினர் களாக சோகோ நிறுவனத் தலைவர் பத்ம ஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு, பூமி குழுமம் பன்னாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜெய்குமார், சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.ரவி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    விழாவில் 465 மாண வர்கள்,379 மாணவிகள் என மொத்தம் 844 பேர் பட்டம் பெற உள்ளார்கள்.இதில் 16 பேர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று தங்கப் பதக்கம் பெற இருக்கிறார்கள்.பிற்பட்ட கிராமப்புற இளையோர் நலன் கருதி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி இன்று இளங் கலையில் 19 பிரிவு களும், முதுகலையில் 7 பிரிவுகளும் உள்பட ஆய்வுப்பிரிவு, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் ஆகியவையுடன் சிறப்பாக கல்வி பணியாற்றி வருகிறது.

    பட்டமளிப்பு விழா விற்கான ஏற்பாடுகளை பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன்,முதல்வர் மற்றும் தாளாளர் முனைவர் சுவாமிநாதன்,பொருளாளர் ஹாஜி முகம்மது மீரா, முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண்சுந்தர் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.
    • 3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோம நாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்தை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    கடந்த 15-ந் தேதி முதல் நவராத்தி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவிலில் அம்மன் சன்னதி அருகே கண்ணைக்கவரும் வகையில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் தினமும் மூலவர் ஆனந்தவல்லி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    தினமும் உற்சவ அம்ம னுக்கு பூஜைகள், தீபாரதனை கள் நடைபெற்று அதன்பின் துர்க்கை அம்மனுக்கு பூஜை கள் நடைபெற்று வருகிறது. தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனையும் கொலு அலங்காரத்தையும் தரிசித்து செல்கின்றனர்.

    நவராத்தி விழாவுக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். தினமும் மாலையில் கோவில் மண்ட பத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் வேதியே ரேந்தல் விலக்கில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் மகாபஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில்3 ஆயிரம் சுவாமி பொம்மைகள் வைத்து பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர் சாந்த நாயகி அம்மன்கோவில், செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களிலும் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

    • நாலுகோட்டையில் ரூ.5 ½ லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைத்தற்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறப்பட்டது.
    • வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வடக்கு ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதியினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

    இதனை நாலு கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கிளைச் செயலாளர் உடையப்பன், வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    நிழற்குடை அமைத்து நிதிஒதுக்கிய செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் மருத்துவமனையின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளை சார்ந்த முதல் நிலை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவை யான நிதி நிலைகள் ஆகியன தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்து ரைத்து, அவைகள் தொடர் பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகள், ரூ.472.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகள், நெடுமரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பனை ஓலை பயிற்சி மையம், தி.வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் செயல்பாடுகள், அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் ஆகியன குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மக்களை தேடி மருத்துவ திட்ட பயனாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்து வமனையின் செயல்பாடு களையும் ஆய்வு செய்தனர்.

    • சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை குலவையிட்டு பாடினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கொட்டக்குடி ஊராட்சியில் கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் நகர்.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மண் சாலை போக்குவரத்திற்கு மட்டுமின்றி, திருவிழா காலங்களில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு ஊர்வலத்துக்கும் முக்கிய பயன்பாடாக உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை இல்லாமல் மிகவும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆண்டுதோறும் இந்த தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் தெரு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் கூட தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுகிறது. மாறி உள்ளது. இதனால் மழைநீர் கழிவு நீராக சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் சேரும் சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாற்று நடும்போது குலவையிட்டு தங்களது துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    • மருது பாண்டியர்களின் நினைவு தினம் திருப்பத்தூரில் கலெக்டர்- போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தனர்.
    • சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மருது பாண்டியர்களின் வாரிசுதாரர் ராமசாமி,திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலிகான், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, திருப்புத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு, சாமுண்டீஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • திருப்புவனத்தில் கருணாநிதி நூற்றாண்டு பூங்கா பொதுமக்களின் வரவேற்பை பெற்றது.
    • பூங்காவில் உள்ள மரக்கன்றுகளை பேரூரட்சி தலைவர் சேங்கைமாறன் பார்வையிட்டார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி யில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த சேங்கைமாறன் பதவி வகித்து வருகிறார்.

    தற்போதைய பேரூராட்சி மன்றம் அமைந்தது முதல் திருப்புவனம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவை யான வடிகால், சாலை, சிமிண்ட்சாலை, பேவர் பிளாக் சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    மேலும் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகளை சுட்டிக்காட்டும் நிலையில் தலைவர் சேங்கைமாறன் நேரடி பார்வையில் இக் குறைகளை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாக்கியா நகரில் பிரமாண்ட பூங்கா அமைத்து அதில் சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பேவர்பிளாக் கல் பதிக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை நேரங்களில் ஏராளமானோர் இங்கு வந்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

    பெண்கள் மாலை நேரங்க ளில் பூங்காவில் உட்கார்ந்து தங்கள் குழந்தைகள் விளையாடுவதை ரசிக்கின்ற னர். இப் பூங்காவில் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதி ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைவர் சேங்கைமாறன் ஆலோசனைப்படி இங்கு தற்போது பலன் தரும் வாழை , தென்னை, மற்றும் பழ மரக்கன்றுகள், பூச்செடிகள் உள்ளிட்டவை நடப்பட்டு பேரூராட்சி பணியாளர்களால் பரா மரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரத்தில் கண்ணைக்கவரும் வகையில் மின்விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பூங்காவுக்கு திருப்புவனம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

    இதுகுறித்து தலைவர் சேங்கைமாறன் கூறுகையில், எங்களது கனவு திட்டமான இந்த கருணாநிதி நூற்றாண்டு விழா பூங்காவை அமைத்து பரா மரித்து வருகிறோம். தினமும் இப்பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நகரில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதி களுக்கு நிதி ஒதுக்கி திட்டங்கள் நிறை வேற்றப்படுகிறது. அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    • அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை
    • அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை 9 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்த என அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

    மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    அக்டோபர் 27-ந்தேதி காளையார் கோவிலில் மருது பாண்டியர் குருபூஜை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 31-ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடக்கிறது.

    • தேவகோட்டை மணிமுத்து ஆற்றில் 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் ஐப்பசி மாத முதல் தீர்த்த வாரியை முன்னிட்டு நகரில் உள்ள சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்தி பூங்காவை அடைந்தனர்.

    அதேபோல் தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அகத்தீஸ்வரர், சவுந்தர நாயகி அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் கோட்டூர், மார்க்கண்டன்பட்டி வழி யாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் காந்தி பூங்காவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் மணிமுத்தா ற்றில் எழுந்தருளினர்.

    அங்கு 7 சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காரை சேர்க்கை யாளர்களும், நாட்டார்களும், நகரத்தார்களும் பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடு களை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

    • குழந்தைகளை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. இங்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் முதல் தத்தெடுப்பு கூட்டம் நடைபெற்று.

    அரசு விதிகளின்படி பதிவுபெற்ற ஒரு குடும்பத்தி னர்களில், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்த பெற்றோருக்கு, மாவட்ட கலெக்டரால் இக்கூட்டத்தின் வாயிலாக குழந்தை வழங்கப்பட்டது.

    மேலும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு வயது மற்றும் ஆவணங்களுடன், வளனார் தத்து வள மையம், மானகிரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன், வளனார் தத்து வள மைய நிர்வாகி, சகோதரி.மேரி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு வழங்க கோரிக்கை விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    இளையான்குடி வட்டத்தில் 54 வருவாய் பிரிவுகள் உள்ளன. இவற்றில் கடந்த ஆண்டுக்கான பயிர்காப்பீடு தொகை 12 வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்க உத்தர விடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அனைத்து வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பயிர்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இளையான்குடி ஒன்றி யத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இளையான்குடி வட்டா ட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது அவர்கள் அலுவலக வளாகத்துக்குள் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் பயிர்காப்பீடு வழங்க கோரி அலுவலக வாயிலில் நின்று முழக்கங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, துணைத் தலைவர் அழகர்சாமி, ராமநாதபுரம் வைகை பாசன சங்கத் தலைவர் மதுரைவீரன், தாலுகா சங்கச் செயலாளர் செந்தில் குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜான் சேவியர் பிரிட்டோ, விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருமலை கதிரேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மனு வட்டாட்சி யரிடம் வழங்கப்பட்டது.

    • துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார்.
    • ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    காரைக்குடி

    கடந்த கிராமப்புற உள் ளாட்சி தேர்தலில் சிவ கங்கை மாவட்டம் சங்கராபு ரம் ஊராட்சியில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர் ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றி பெற்றதாக சான்றி தழ் வழஙகப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேவி மாங்குடி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதி மன்றம் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம தீர்ப்பின்படி தேவிமாங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப் பேற்றார்.

    இதனிடையே பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த பாண்டியராஜன் உள் பட சில உறுப்பினர்கள் ஒரு தரப்பாகவும், தேவிமாங் குடி உள்பட சில உறுப்பி னர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவாததால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெற வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட முடி யாத நிலை இருந்து வந்ததும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே துணை தலைவரின் இரண்டாமிடம் கையெழுத்திடும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் நிறுத்தி வைத்தார். அதனை எதிர்த்து துணைத் தலைவர் பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கு நிலுவை யில் இருந்து வருகிறது.

    கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்த உத்தரவு காலம் முடிவடைந்த நிலையில், தற்போது மழைக் காலம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அத்தியா வசிய பணிகளை மேற் கொள்ளவும், ஊழியர்க ளுக்கு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள ஏது வாக தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு 203-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளரின் அவசரகால அதிகாரங்களின்படி அடிப் படை நிர்வாகம் செயல்பட ஏதுவாக சிற்றுராட்சிகளின் மீது விதிக்கப்பட்ட கடமைக ளில் முதல் நிலை கையொப் பமிட ஊராட்சிமன்ற தலை வருக்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் (கிராம ஊராட்சி), இரண்டா மிடம் கையொப்ப மிட ஊராட்சிமன்ற துணை தலைவருக்கு பதிலாக சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தற்காலிக மாக அனுமதி அளித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தர விட்டுள்ளார்.

    ×