40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்

40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்
செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்
Published on

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் அ.தி.மு.க 52 -ம் ஆண்டு தொடக்க நாள் விழா பொதுக்கூட்டம் புதுவயலில் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நரிவிழி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன், மாசான், சுப்பிரமணியன், புதுவயல் பேரூர் செயலாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் விஜய்கணேஷ், தஞ்சை சேகர் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லாட்சி தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணிணி உள்ளிட்ட ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு 12 ஆயிரம் கோடியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வீரசேகர், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா அம்பலம், ஊரவயல் ராமு, நகர செயலாளர்கள் மெய்யப்பன், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com